மத்திய கிழக்கு பகுதியில் நீடித்து வரும் போர் மற்றும் குறிப்பாக ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக எரிபொருள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழல், உலகளாவிய எண்ணெய் சந்தையில் கடுமையான தட்டுப்பாடு உருவாக்கியுள்ளது. இந்த நிலையால் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல் விலைகள் அதிக அளவில் மாறுபடுகின்றன. இதன் விளைவாக பல நாடுகள் தங்கள் உள்நாட்டு எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

ரஷ்யாவின் முக்கிய முடிவு
இந்த சூழலில், ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக், ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை பெட்ரோல் ஏற்றுமதியை தடை செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை உலக சந்தையில் நிலவும் பாதிப்புகளை சமாளிக்கவும், உள்நாட்டு எரிபொருள் தேவையை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் ரஷ்யாவில் சில பகுதிகளில் பெட்ரோல் பற்றாக்குறை ஏற்பட்டது. குறிப்பாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடந்த தாக்குதல்கள் மற்றும் பருவகால உற்பத்தி பாதிப்பு மூலம் தேவைகள் அதிகரித்த போது முறையான சப்ளை செய்ய முடியாமல் போனது. இதை கருத்தில் கொண்டு, உள்நாட்டு விநியோகத்தை உறுதி செய்ய இந்த ஏற்றுமதி தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவின் முக்கிய சுத்திகரிப்பு நிலையங்களான Saratov மற்றும் Kirishi ஆகியவை தாக்குதலால் பாதிக்கப்பட்டதால், உற்பத்தி திறனில் சுமார் 10% வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவும் இந்த முடிவை அவசியமாக்கியுள்ளது. ரஷ்யா விதித்துள்ள இந்த தடை பெட்ரோலுக்கு மட்டும் தான் கச்சா எண்ணெய்-க்கு இல்லை, இதனால் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய்-க்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் உலகளவில் எண்ணெய் சப்ளை குறைந்துள்ளது. இதனுடன் ரஷ்யாவின் ஏற்றுமதி தடை இணைந்ததால், உலக சந்தையில் எரிபொருள் கிடைப்பது மேலும் சிக்கலாகி வருகிறது. இதனால் எதிர்காலத்தில் விலை உயர்வு அழுத்தம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ரஷ்யா கச்சா எண்ணெய் மட்டும் அல்லாமல் பெட்ரோல், டீசல், கேசோலின், விமான எரிபொருள் ஆகியவற்றையும் அண்டை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்தியாவின் ஆக்ஷன் பிளான்
இதே நேரத்தில், இந்தியா எரிபொருள் ஏற்றுமதிக்கு மீண்டும் விண்ட்ஃபால் வரியை அமல்படுத்தியுள்ளது. டீசலுக்கு லிட்டருக்கு ₹21.5 மற்றும் விமான எரிபொருளான ATF-க்கு ₹29.5 வரி விதிக்கப்பட்டுள்ளது. இது முன்பு 2024-ல் நீக்கப்பட்ட வரி முறையை மீண்டும் கொண்டு வந்ததாகும். ஆனால் ஏற்றுமதிக்கு எவ்விதமான தடையும் விதிக்கப்படவில்லை என்பது கவனிக்க வேண்டியதாக உள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய நாடாக இருக்கும் ரஷ்யா பெட்ரோல் ஏற்றுமதிக்கு எவ்விதமான தடையும் விதிக்காத நிலையில் இந்தியா ஏரிபொருள் ஏற்றுமதிக்கு வரியை தாண்டி எவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்காவில்லை.
இந்த வரி விதிப்பு நடவடிக்கை மூலம், உலக சந்தையில் விலை உயர்வு மற்றும் நிலையற்ற சூழலில் இருந்து மத்திய அரசு வரி வருவாய் ஈட்டுவதும், உள்நாட்டு தேவையை பாதுகாப்பதும் நோக்கமாக உள்ளது. எரிபொருள் துறையில் ஏற்பட்டுள்ள தடுமாற்றங்களுக்கு ஏற்ப மத்திய அரசின் கொள்கை மாற்றமாக இது உள்ளது.
மத்திய கிழக்கு போர் மூலம் உற்பத்தி பாதிப்பு, சப்ளை குறைவு போன்ற காரணிகள் ஒன்றாக இணைந்து, உலக பொருளாதாரத்திற்கு பெரிய சவாலாக மாறி வருகிறது.
More From GoodReturns

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!



Click it and Unblock the Notifications