சவுதி அரேபியா மற்றும் ஈராக் நாடுகளைத் தாண்டி, ரஷ்யா இந்தியாவுக்கு அதிகம் கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நாடாக உயர்ந்துள்ளது.
முதல் முறையாக ரஷ்யா இந்திய கச்சா எண்ணெய் சப்ளையர் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக எரிசக்தி சரக்கு டிராக்கர் நிறுவனமான Vortexa வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகிறது.
ரஷ்யா அக்டோபர் மாதம் இந்தியாவிற்கு ஒரு நாளுக்கு 946,000 பேரல் கச்சா எண்ணெய் சப்ளை செய்தது, இது மாதாந்திர அளவீட்டில் எப்போதும் எட்டாத அளவாகும்.
கச்சா எண்ணெய் இறக்குமதி
அக்டோபர் மாதத்தில் இது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 22% ஆக உள்ளது. இக்காலகட்டத்தில் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும் ஈராக் நாட்டின் பங்கு 20.5 சதவீதமாகவும், சவூதி அரேபியாவின் பங்கு 16 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
ரஷ்யா
செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் ஒட்டு மொத்த கச்சா இறக்குமதி அக்டோபரில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் ரஷ்யாவின் இறக்குமதி அளவு அக்டோபர் மாதத்தில் 8 சதவீதம் வரையில் அதிகரித்து உள்ளது.
Vortexa தரவுகள்
சிங்கப்பூர் மற்றும் லண்டனில் அலுவலகங்களைக் கொண்டு எரிசக்தி நுண்ணறிவு நிறுவனமாக விளங்கும் வோர்டெக்சா உலகம் முழுவதும் எண்ணெய் மற்றும் எரிவாயு டேங்கர்களைக் கண்காணிக்கிறது, சரக்கு மற்றும் சரக்கு போக்குவரத்து குறித்த தரவுகளை வழங்குகிறது. ஆனால் இதுகுறித்த தரவுகளை இன்னும் ரஷ்யாவோ அல்லது இந்திய தரப்பில் இருந்தோ வெளியிடப்படவில்லை.
இந்தியா
முதல் முறையாக, ஐரோப்பிய பகுதிகளைத் தாண்டி ரஷ்ய கச்சா எண்ணெய்யைக் கடல்வழியாக இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய பகுதியை விடவும் ரஷ்ய கச்சா எண்ணெய்யை அளவு 34% அதிகமாகும்.
10 லட்சம் பேரல்கள்
அக்டோபர் மாதம் ஒரு நாளைக்கு 10 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை அதிக அளவில் வாங்கும் நாடாகச் சீனா தொடர்ந்து தனது இடத்தை விட்டுக்கொடுக்காமல் உள்ளது. இந்தியாவும் அக்டோபர் மாதத்தில் ரஷ்யாவுடனான எண்ணெய்யை இறக்குமதி வர்த்தகம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
தடாலடி வளர்ச்சி
2021ல் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மொத்த அளவில் 1 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த நிலையில் உக்ரைன் உடனான போருக்கு பின்பும், உலக நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்த பின்பும் இறக்குமதி அளவு பெரிய அளவில் உயர்ந்து ஈராக், சவுதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
யூரேசியா வர்த்தகம்
ரஷ்யா, கஜகஸ்தான் மற்றும் அஜர்பைஜான் உள்ளிட்ட யூரேசியாவின் பங்கு கடந்த ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் 5% ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு 21% ஆக அதிகரித்துள்ளது என எண்ணெய் அமைச்சக தரவு கூறுகிறது.
மத்திய கிழக்கு
இது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் ஒருங்கிணைந்த பங்கை ஒரு வருடத்திற்கு அளவீட்டை ஒப்பிடுகையில் கிட்டதட்ட பாதியாகக் குறைந்து 18% ஆக உள்ளது. ஆனால் மத்திய கிழக்கின் நாடுகளின் பங்கு தொடர்ந்து அதிகப்படியாக 59% ஆக உள்ளது.
OPEC+ அமைப்பு
OPEC+ அமைப்பில் இருக்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் அதன் உற்பத்தி அளவை குறைக்க உள்ளதாகச் செப்டம்பர் மாதம் அறிவித்துள்ளது. 2020 பின்பு OPEC+ அமைப்பு கச்சா எண்ணெய் விலையை உயர்த்திக் கூடுதல் வருமானத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகக் கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளுக்கு 2 மில்லியன் பேரல் குறைக்க முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications