உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின்பு மேற்கத்திய நாடுகளின் தடை விதித்த அடுத்தடுத்த தடையின் காரணமாகச் சர்வதேச சப்ளை செயின் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக உலக நாடுகளின் ரஷ்யா உடனான வர்த்தக அளவு தொடர்ந்து சரிவை சந்தித்தது, ஆனால் இந்தியாவுக்கு இந்தப் போருக்கு பின்பு தான் புதிய வாய்ப்பும், வர்த்தகக் கூட்டாளியும் உருவானது.
உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின்பு இந்தியா - ரஷ்யா மத்தியிலான வர்த்தகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பாக அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு அதிகக் கச்சா எண்ணெய் சப்ளை செய்த நாடுகள் பட்டியில் ஈராக் மற்றும் சவுதி அரேபியா-வை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை ரஷ்யா பிடித்துள்ளது.
டீ வர்த்தகம்
இந்த நிலையில் ரஷ்யா இந்தியாவிடம் இருந்து அதிகமான டீ வாங்க துவங்கியுள்ளது. இந்தியா பல துறையில் அதிகம் இறக்குமதி செய்யும் நாடாகவே இருக்கும் நிலையில் கடந்த சில வருடத்தில் பல துறையில் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது குறிப்பாகச் சீனாவுக்கு அரிசி, ஆசிய நாடுகளுக்கு அரிசி முதல் உலகம் முழுவதும் டெக்ஸ்டைல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
சப்ளை செயின்
இந்த நிலையில் கோவிட் பாதிப்பு, அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தகப் போர், ரஷ்யா உக்ரைன் போருக்கு பின்பு சர்வதேச சந்தையின் சப்ளை செயினில் பெரிய மாற்றும் உருவாகியுள்ளது.
கென்யா டீ
இந்த நிலையில் ரஷ்யா பல வருடங்களாகக் கென்யா-வில் இருந்து வாங்கி வரும் டீ விலை அதிகரித்துள்ள காரணத்தால் ரஷ்யா கென்யா-வை கட் செய்து விட்டு இந்தியாவிடம் இனி அதிகப்படியான டீ வாங்க திட்டமிட்டு உள்ளது.
டீ ஏற்றுமதி அதிகரிப்பு
இதன் மூலம் 2022 ஆம் ஆண்டின் முதல் 8 மாதத்தில் மட்டும் ரஷ்யாவுக்கான இந்திய டீ ஏற்றுமதி 5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் தென்னிந்தியப் பகுதிகளில் டீ உற்பத்தி அதிகமாகவும், விலை குறைவாகக் கிடைக்கும் காரணத்தால் டீ விலை ஒரு கிலோவிற்கு 13 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
டீ பே கலாச்சாரம்
ரஷ்யா எப்போது டீ இலைகளைத் தான் அதிகம் வாங்கும், ஆனால் தற்போது ரஷ்யாவில் டீ பே கலாச்சாரம் வேகமாகப் பரவி வரும் நிலையில் இந்திய டீ வகைகளுக்கு அதிகப்படியான டிமாண்ட் உருவாகியுள்ளது.
விலை உயர்வு
கென்யா டீ வகைகளை அதிகம் வாங்கும் நாடுகள் பட்டியலில் ரஷ்யா 5வது இடத்தில் உள்ளது, இந்த நிலையில் ஒரு கிலோ டீ விலை ஒரே வாரத்தில் 2.27 டாலரில் இருந்து 2.37 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் ரஷ்யா தனது டீ கொள்முதல் வர்த்தகத்தை இந்தியாவுக்கு மாற்றியுள்ளது, இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் தற்போது மேம்பட்டு வரும் நிலையில் டீ ஏற்றுமதி மூலம் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
உள்நாட்டு நாணய
ரஷ்யா இந்தியா மத்தியிலான அனைத்து வர்த்தகத்திற்கும் ரஷ்யா உள்நாட்டு நாணயத்தைப் பயன்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் செய்து முடித்துத் தயாராக இருக்கும் நிலையில் இந்தியா தொடர்ந்து டாலர், யூரோ வாயிலாகவே ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்கிறது.
ரூபாய் - ருபிள் வர்த்தகம்
இந்தியா ரஷ்யாவுடன் ரூபாய் - ருபிள் நாணயத்தில் வர்த்தகம் செய்தால் மேற்கத்திய நாடுகள் இந்திய வங்கிகள் மீது தடை விதிக்குமா என்ற அச்சம் நிலவுகிறது. இதனாலேயே இந்தியா உள்நாட்டு நாணயத்தில் வர்த்தகம் செய்யத் தயங்குகிறது. இதேபோல் இந்தியா - ரஷ்யா மத்தியிலான வர்த்தகப் பற்றாக்குறை மிகவும் அதிகம் என்பதும் இந்தத் தயக்கத்திற்கு முக்கியமான காரணமாக உள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications