ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடின் பல நாடுகளின் கடுமையான எதிர்ப்புகளைத் தாண்டி உக்ரைன் எல்லையில் ராணுவம், டேங்க், விமானப்படை வரையில் அனைத்தையும் குவித்து வருகிறார்.
மேலும் ரஷ்ய - உக்ரைன் எல்லை பகுதிக்கு 100க்கும் அதிகமான ராணுவ டேங்குகள் சாலையில் செல்லும் வீடியோ சமீபத்தில் வைரலானது. இதனால் ரஷ்யா - உக்ரைன் மத்தியில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
அரபு நாடுகளைப் போல் ரஷ்ய அரசுக்கும் பெரும் பகுதி வருமானம் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விற்பனை வாயிலாகவே கிடைக்கிறது. உலகின் 3வது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடாக இருக்கும் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தால் அமெரிக்கா, பிரிட்டன் உட்படப் பல வல்லரசு நாடுகள் வர்த்தகத் தடை விதிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனாலும் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுக்கத் தயாராக முக்கியக் காரணம், சீனாவுடன் செய்த ஒப்பந்தம் தான்.
ரஷ்யா - உக்ரைன்
ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தால் ஐரோப்பிய சந்தைக்கு விற்பனை செய்யப்படும் கச்சா எண்ணெய் வர்த்தகமும், அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் ரஷ்யாவுக்குப் பெரிய அளவில் பாதிக்கப்படும். இதை ஈடு செய்யும் வகையில் சீனா முக்கியமான ஒப்பந்தத்தைப் பிப்ரவரி மாதத்தின் துவக்கத்தில் செய்துள்ளது.
80 பில்லியன் டாலர் ஒப்பந்தம்
பிப்ரவரி 4ஆம் தேதி ரஷ்ய அரசின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான Rosneft, சீன அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் சீனா நேஷனல் பெட்ரோலியம் கார்பரேஷன் உடன் சுமார் 80 பில்லியன் டாலர் மதிப்பிலான 100 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் பெற 10 வருட ஒப்பந்தம் செய்துள்ளது.
விளாடிமிர் புடின் - ஜி ஜின்பிங்
ரஷ்யா - சீனா மத்தியில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் நட்புறவும் பெரிய அளவில் மேம்படும். மேலும் சீன மற்றும் ரஷ்ய அரசு பத்திரிக்கைகள் சமீபத்திய புடின் மற்றும் ஜி ஜின்பிங் சந்திப்பிற்குப் பின்பு இரு நாடுகளின் நட்புறவும் எந்த உயரத்திற்குப் போகும் என்பது தெரியவில்லை எனப் புகழ்ந்துள்ளது.
வருமான இழப்புச் சமாளிப்பு
ரஷ்யா - சீனா மத்தியில் செய்யப்பட்ட 80 பில்லியன் டாலர் கச்சா எண்ணெய் ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா ரஷ்யா மீது தடை விதித்தாலும் வருமான இழப்பைச் சமாளித்துக்கொள்ள முடியும் என்பது ரஷ்யாவின் எண்ணம்.
ஜோ பைடன் - விளாடிமிர் புடின்
மேலும் கடந்த வாரம் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு மணிநேரம் வீடியோ வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் இரு நாட்டுத் தலைவர்கள் மத்தியில் எவ்விதமான தீர்வும் எட்டப்படவில்லை. இதுமட்டும் அல்லாமல் இருநாட்டு அதிபர்களும் பல்வேறு எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா சீனாவுக்குக் கண்டனம்
இதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு, சீனா ஆதரவும் அளிக்கும் காரணத்தால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யா - சீனாவின் 80 பில்லியன் டாலர் ஒப்பந்தம் வர்த்தகம் மட்டும் அல்லாமல் புதிய முதலீடுகளும் சீனாவில் இருந்து பெற முடியும்.
எரியும் நெருப்பில் எண்ணெய்
சீனாவின் ஒப்பந்தம் ரஷ்யா உக்ரைன் உடன் போர் தொடுக்க உறுதியாக உள்ளது. ஆனால் சீனா ஒப்பந்தம் செய்யவில்லை எனில் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கும், வர்த்தத தடை விதிக்கப்படலாம் என்பதால் ரஷ்யா பின்வாங்க வாய்ப்பு இருக்கும், ஆனால் தற்போது இல்லை.
More From GoodReturns

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications