அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடி உடன் வர்த்தக ஒப்பந்தத்திற்காக தொலைபேசியில் அழைத்து பேசிய போது இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தி அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து வாங்க ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் கூறியது தற்போது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா தனது கச்சா எண்ணெய் கொள்முதலை மாற்றுவதாக டிரம்ப் தெரிவித்தார். ஆனால் ரஷ்யா இதை மறுத்துள்ளது.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் புதன்கிழமை தெரிவிக்கையில் "இந்தியா எந்த நாட்டிலிருந்தும் கச்சா எண்ணெய் வாங்க சுதந்திரம் கொண்டு உள்ளது. ரஷ்யா இந்தியாவுக்கு ஒரே எண்ணெய் சப்ளையர் அல்ல. இந்தியா காலம் காலமாக பல நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதில் புதிதாக எதுவும் இல்லை" என்று கூறினார்.
மேலும் பெஸ்கோவ், ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்றும் தெரிவித்திருந்தார். ரஷ்ய தனியார் வணிக ரேடியோ காமர்சன்ட் FM-இல் வெளியான செய்தியின்படி, பிரதமர் மோடி ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்திலும் குறிப்பிடவில்லை.
மேலும் தேசிய எரிசக்தி பாதுகாப்பு அமைப்பின் மூத்த நிபுணர் இகோர் யுஷ்கோவ் கூறுகையில், இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை முழுமையாக நிறுத்த முடியாது. ரஷ்ய எண்ணெய் இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் உள்ளது. விலை மற்றும் சப்ளை நிலைத்தன்மை ஆகியவை ரஷ்யாவை முக்கிய சப்ளையராக வைத்துள்ளன எனவும் விளக்கினார்.
இந்தியா தனது கச்சா எண்ணெய் நுகர்வை தொடர்ந்து பல்வகைப்படுத்தி வருகிறது. 2022க்கு முன்பு ரஷ்யாவிலிருந்து மிகக் குறைவாகவே கச்சா எண்ணெய் வாங்கியது. ஆனால் உக்ரைன் போருக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தின. அப்போது இந்தியா தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெய் வாங்கியது. இது இந்தியாவில் எரிபொருள் விலையை குறைக்க உதவியது.
இந்தியாவின் எரிசக்தி கொள்கை எப்போதும் நுகர்வோர் தேவை மற்றும் விலை நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது. அரசியல் அழுத்தங்களுக்கு அப்பால் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் விலை ஸ்திரத்தன்மை முக்கியம் என்ற அடிப்படையில் தான் கச்சா எண்ணெய்யை உலக நாடுகளில் இருந்து வாங்கி வருகிறது.
இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்குவதை அதிகரித்து வருகிறது. ஆனால் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை திடீரென நிறுத்துவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை.
கச்சா எண்ணெய் விலை நிலவரம்:
சர்வதேத சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று சிறிய அளவிலான உயர்வுடன் காணப்படுகிறது. WTI க்ரூட் ஆயில் ஒரு பேரல் 63.61 டாலருக்கு வர்த்தகமாகிறது. இது நேற்றைய அளவை காட்டிலும் 0.63% அதிகமாகும். இதேபோல்
பிரென்ட் க்ரூட் ஆயில் 67.87 டாலருக்கும் (+0.80%), முர்பான் க்ரூட் ஆயில் 68.64 டாலருக்கும் (+0.53%) உயர்ந்துள்ளது.
இந்த சிறிய உயர்வும் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள தேவை அதிகரிப்பு மற்றும் சப்ளை நிலவரத்தால் ஏற்பட்டது.
More From GoodReturns

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications