ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு கச்சா எண்ணெய் சந்தையில் ரஷ்யாவின் ஆதிக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உலக நாடுகள் உணர்ந்த நிலையில், இதே ஆதிக்கத்தைப் பயன்படுத்தித் தற்போது ரஷ்யா ரெசிஷன் அச்சம் அதிகமாக இருக்கும் வேளையில் அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ரஷ்யா வருகிற மார்ச் மாதத்தில் இருந்து தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளுக்கு 500000 பேரல் அளவுக்குக் குறைக்க முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே பணவீக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்திக் கட்டுப்படுத்தி வந்த நிலையில், தற்போது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து உலக நாடுகளுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
ரஷ்யா
ரஷ்யாவின் துணை பிரதமரான அலெக்சாண்டர் நோவக் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் ரஷ்யா வருகிற மார்ச் மாதத்தில் இருந்து தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளுக்கு 500000 பேரல் அளவுக்குக் குறைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
அலெக்சாண்டர் நோவக்
இன்றைய நிலவரப்படி, நாங்கள் உற்பத்தி செய்யப்படும் மொத்த கச்சா எண்ணெய்யையும் முழுமையாக விற்பனை செய்து வருகிறோம். இருப்பினும், 'விலை உச்சவரம்பு' கொள்கைகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கடைப்பிடிப்பவர்களுக்கு நாங்கள் எண்ணெய்யை விற்க மாட்டோம் என்று ரஷ்யாவின் துணை பிரதமரான அலெக்சாண்டர் நோவக் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம்
இதன் எதிரொலியாக ரஷ்யா மார்ச் மாதத்தில் ஒரு நாளுக்கு 500,000 பேரல் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளோம் என ரஷ்யா அறிவிப்பைத் தொடர்ந்து பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2 சதவீதம் உயர்ந்து 86.36 டாலராக உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
இதன் வாயிலாக இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்கும், இதனால் இந்திய ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
60 டாலர் மட்டுமே
சமீபத்தில் உக்ரைன் ஆதரவு மேற்கு நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 60 டாலர் மட்டுமே என்று நிர்ணயம் செய்தது. இதேபோல் பிற கச்சா எண்ணெய் சார்ந்த பொருட்களின் விலை வரம்பையும் குறைத்தது. இதை ரஷ்யா ஏற்க மறுத்த நிலையில் தற்போது உற்பத்தியை குறைத்துள்ளது.
மேற்கத்திய நாடுகள்
ரஷ்யாவை எதிர்க்கும் வகையில் G7, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட கடல்சார் காப்புறுதி, நிதி மற்றும் தரகு ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது.
முழுமையான தடை
இதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எண்ணெய் பொருட்களை வாங்குவதற்கு முழுமையான தடையை விதித்துப் பிப்ரவரி 5 முதல் விலை வரம்புகள் கீழ் தான் இறக்குமதியைச் செய்ய வேண்டும் என நிர்ணயம் செய்ததது. அது ரஷ்யாவுக்குச் சரி, ஐரோப்பாவுக்கும் சரி பெரும் பாதிப்பு தான்.
இந்தியா
மேலும் ரஷ்யா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்தாலும் இந்தியாவுக்கு அளிக்கும் கச்சா எண்ணெய் மீதான
டிஸ்கவுன்ட் தொடர்ந்து அளிக்கும். மேலும் அமெரிக்காவும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் அதன் விலையிலேயே வாங்குவதில் எவ்விதமான பிரச்சனையும் இல்லை எனச் சமீபத்தில் அறிவித்தது.


Click it and Unblock the Notifications