ஜி20 கூட்டத்தில் ரஷ்யா - உக்ரைன் போரை உலக நாடுகள் மத்தியில் இந்தியா கையாண்ட விதம் பலருக்கும் வியப்பு அளித்தது மட்டும் அல்லாமல் ரஷ்யா உடனான உறவு தேவை என்பதையும் மறைமுகமாக காட்டியுள்ளது. இந்த நிலையில் ரஷ்யா தொடர்பாக 2 விஷயங்கள் நடந்துள்ளது.
ரஷ்யா அரசு சைபீரிய பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு போதுமான உற்பத்தி பொருட்களின் சப்ளையை வழங்குவதற்காக கடந்த சில மாதங்களில் இந்தியாவில் இருந்து அலுமினிய உலோகத்தின் தாதுக்களான அலுமினாவை இறக்குமதி செய்வதை துவங்கியுள்ளது.

உலக நாடுகள் விதித்துள்ள தடையை தாண்டி வர்த்தகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரஷ்யா தனது நாட்டுக்கான விநியோகத்தை நிலையானதாகவும், மேம்படுத்தப்படவும் பல நாடுகளில் இருந்து மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் சீனாவை மட்டுமே சார்ந்திருப்பதைக் குறைக்க முடிவு செய்துள்ளது ரஷ்யா.
ரஷ்யா உக்ரைன் மீதான போருக்கு பின்பு அலுமினியத்திற்காக நம்பியிருந்த உக்ரைன், ஆஸ்திரேலியாவிடம் இருந்து சப்ளை, உற்பத்தி, சுத்திகரிப்பு பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் சீனாவில் இருந்து அதிகப்படியான அலுமினியம் வாங்கி வந்தது ரஷ்யா.
உலகின் மிகப்பெரிய அலுமினியம் உற்பத்தியாளராக இருக்கும் ரஷ்யா நாட்டின் Rusal நிறுவனத்திற்கு சொந்தமான ரஷ்யா, அயர்லாந்து, ஜமைக்கா மற்றும் கினியாவில் உள்ள சொந்த அலுமினா சொத்துக்கள் மூலம் அதன் தேவைகளில் 70% சதவீதத்தை தீர்க்கிறது. இதன் மூலம் கடந்த ஆண்டு சீனாவில் இருந்து மட்டுமே 1.8 பில்லியன் டாலர் மதிப்பிலான அலுமினியத்தை வாங்கியது ரஷ்யா.
இதை மாற்றும் நோக்கத்தில் தற்போது ரஷ்யா இந்தியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளிடம் இருந்து அலுமினா தாதுவை வாங்க முடிவு செய்துள்ளது.

இதேபோல் ரஷ்யாவில் மாட்டிக்கொண்டு இருக்கும் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான 150 மில்லியன் டாலர் ஈவுத்தொகையை முறையான வழியில் இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரஷ்யாவில் ஆயில் இந்தியா, இந்தியன் ஆயில் கார்ப், பாரத் பெட்ரோலியம், ONGC ஆகியவை பல்வேறு எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களில் முதலீடுகள் செய்து பங்கு உரிமையை பெற்று பணியாற்றி வருகிறது. இந்த திட்டத்திற்காக இந்திய நிறுவனங்களுக்கு ஈவுத்தொகை பெற்று வருகிறது, ரஷ்ய - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச பேமெண்ட் சேனல்கள் அனைத்தும் ரஷ்யாவுக்கு மூடப்பட்டது.
இதனால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ONGC ஆகியவைக்கு சொந்தமான சுமார் 450 மில்லியன் டாலர் தொகை தற்போது ரஷ்யாவில் முடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications