28 நாள் கெடு.. ஐரோப்பாவின் தலையெழுத்து மாறப்போகிறது.. ரஷ்யாவின் ஆசை இதுதானா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் குடுமியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஷ்யா, கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்தி ஒட்டுமொத்த ஐரோப்பியச் சந்தையின் வளர்ச்சியை முடக்கியுள்ளது.

இது மட்டுமா ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பா மற்றும் உலக நாடுகள் எடுத்த தீர்மானத்தின் படி ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விலையைக் குறைத்தும், அதன் விநியோகத்தை நிறுத்த உள்ளது.

இந்த நிலையில் அடுத்த 3 வாரத்தில் ஐரோப்பாவிற்குக் கடல் வழியாக அனுப்பப்படும் ரஷ்யா-வின் கச்சா எண்ணெய் மொத்தமாக நிறுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் ஐரோப்பாவிற்கு இனி கச்சா எண்ணெய் தேவையை தீர்க்கப்போவது யார்..? ஐரோப்பிய யூனியன் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ளப் போகிறதா..?

Year ender 2022.. இலங்கை பொருளாதார நெருக்கடி முதல் அரசியல் மாற்றங்கள் வரையில்.. இதோ ஒரு பார்வை! Year ender 2022.. இலங்கை பொருளாதார நெருக்கடி முதல் அரசியல் மாற்றங்கள் வரையில்.. இதோ ஒரு பார்வை!

220 மில்லியன் பேரல்

220 மில்லியன் பேரல்

கச்சா எண்ணெய் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து நிறுவனமான வோர்டெக்சா தரவுகளின்படி, ஐரோப்பிய யூனியன் கடந்த ஆண்டு மட்டும் ரஷ்யாவில் இருந்து சுமார் 220 மில்லியன் பேரல்கள் அளவிலான டீசல் உற்பத்திக்கான எரிபொருளை வாங்கியுள்ளது. இதை வைத்து தான் ஐரோப்பிய யூனியனில் கார்கள், டிரக்குகள், கப்பல்கள், கட்டுமானம் மற்றும் உபகரண உற்பத்தி ஆகிய அனைத்தும் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டது.

ஐரோப்பிய யூனியன்

ஐரோப்பிய யூனியன்

இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்-ஐ வேறு நாடுகளில் இருந்து வாங்க வேண்டும் என்றால் சுமார் 14,000 ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளங்கள் நிரம்பும் அளவிற்கு டீசல் வாங்க வேண்டும்.

ரஷ்யா

ரஷ்யா

தற்போது உலக நாடுகள் இருக்கும் சூழ்நிலையில் இது சாத்தியமா என்றால் கட்டாயம் கஷ்டம் தான், பல தசாப்தங்களாக ஐரோப்பிய யூனியன் ரஷ்யா-வை நம்பி மட்டுமே இயங்கி வந்த நிலையில் பெரிய அளவில் மாட்டிக்கொண்டு உள்ளது.

 50 சதவீத கச்சா எண்ணெய்

50 சதவீத கச்சா எண்ணெய்

ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய பின்பும் ஐரோப்பிய யூனியன் கிட்டத்தட்ட 50 சதவீத கச்சா எண்ணெய், எரிவாயு-வை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. ஜனவரி மாதம் கூட ஐரோப்பிய யூனியன் ஒரு நாளுக்கு 1.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாலும் அதில் 0.7 மில்லியன் பேரல் ரஷ்யாவிடம் இருந்து மட்டுமே இறக்குமதி செய்கிறது.

முதன்மையான சப்ளையர்

முதன்மையான சப்ளையர்

ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கும் ரஷ்யா முதன்மையான எண்ணெய் சப்ளையராக இருக்கும் வேளையில், ரஷ்யாவை தொடர்ந்து சவுதி அரேபியா, இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சிறிய எண்ணெய் உற்பத்தி நாடுகள் விநியோகம் செய்து வருகிறது.

ஐரோப்பாவுக்குச் செக்

ஐரோப்பாவுக்குச் செக்

ஆனால் 3 வாரத்திற்குப் பின்பு ரஷ்யாவின் 50 சதவீத எண்ணெய் நிறுத்தப்பட்டால் ஐரோப்பா எப்படிச் சமாளிக்கும். ஐரோப்பாவின் எண்ணெய் இறக்குமதியில் முக்கியமான மாற்றங்கள் ஏற்கனவே நடந்துள்ளது என்றால் மிகையில்லை.

கடல்வழி ஏற்றுமதி

கடல்வழி ஏற்றுமதி

2021 ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட அனைத்து கடல்வழி ஏற்றுமதிகளில் பாதிக்கும் மேற்பட்டவை தடை செய்யப்பட்ட ரஷ்யாவில் இருந்து வந்தவை. கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த விகிதம் சுமார் 40% ஆகக் குறைந்துள்ளது. ரஷ்யாவின் இடைவெளியை சவுதி அரேபியா மற்றும் இந்தியா தற்போது நிரப்பி வருகிறது.

சவுதி அரேபியா மற்றும் இந்தியா

சவுதி அரேபியா மற்றும் இந்தியா

ஆனால் சவுதி அரேபியா மற்றும் இந்தியா ஓன்று சேர்ந்தால் கூட ரஷ்யா-வை ஈடு செய்ய முடியாத நிலையில் தான் உள்ளது. இதனால் ஐரோப்பிய யூனியன் ரஷ்யா உடன் இணக்கமான ஒரு முடிவுக்கு வராவிட்டால் கட்டாயம் பெரும் பிரச்சனையை 28 நாட்களுக்குப் பின்பு எரிபொருள் பற்றாக்குறையில் சந்திக்கும்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

இதைத் தொடர்ந்து வர்த்தகம், உற்பத்தி, போக்குவரத்து, விலைவாசி என அனைத்திலும் பெரும் பாதிப்பை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்கொள்ளும். உதாரணமாகத் தற்போது பாகிஸ்தான் போதுமான நிதி நிலை இல்லாமல் எரிபொருள் பெற முடியாமல் தவித்து வருவது போல் ஐரோப்பாவும் மாறலாம்.

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய 2022 ஆம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் முதல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய்யில் சுமார் 40 சதவீத தள்ளுபடி அளிக்க ஒப்புதல் அளித்தார். இந்தத் தள்ளுபடி மூலம் இந்தியா அரசு சுமார் 35000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சேமித்துள்ளதாகக் கணிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா

இந்தியா

இந்த நிலையில் தான் இந்தியா ரஷ்யாவுக்குக் கச்சா எண்ணெய்-யில் இருந்து டீசல் மூலப்பொருட்களைத் தயாரித்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யத் துவங்கியுள்ளது. ரஷ்யா அரசு ஐரோப்பாவில் விட்ட வர்த்தகத்தைத் தற்போது இந்தியா மற்றும் சீனா அதிகப்படியான கச்சா எண்ணெய் விநியோகம் செய்து ஈடு செய்து வருகிறது.

60 டாலர் விலை வரம்பு

60 டாலர் விலை வரம்பு

உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து நாடுகளும் இணைந்து குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், ஜி7 நாடுகள், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து ரஷ்யாவின் நிதி நிலையை முடக்க வேண்டும் என்பதற்காகக் கச்சா எண்ணெய் மீது டிசம்பர் மாதம் முதல் 60 டாலர் விலை வரம்பை விதித்தது.

தடை

தடை

அதாவது உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து நாடுகளும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் அதற்கு 60 டாலர் மட்டுமே செலுத்த வேண்டும் என்று நிர்ணயம் செய்துள்ளது. இல்லையெனில் வாங்க தடை விதிக்கப்பட்டு இன்சூரன்ஸ் மற்றும் கப்பல் முடக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russia deliveries of diesel to European Union ends in 28 days; What will happen to EU economy

Russia deliveries of diesel to European Union ends in 28 days; What will happen to EU economy
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X