ரஷ்யாவில் இருந்து தொடர்ந்து கிடைத்து வரும் தள்ளுபடி விலை கச்சா எண்ணெய் இறக்குமதி காரணமாக, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு கடந்த நிதியாண்டில் (2023-2024) 15.9 சதவீதம் குறைந்துள்ளது.
இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருளும், எரிசக்தியும் எந்த அளவுக்கு முக்கியம் என்பது சொல்லத் தேவையில்லை. இந்த நிலையில் இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 80-90 சதவீதம் இறக்குமதி வாயிலாகப் பூர்த்தி செய்யப்படும் வேளையில் அரசு ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான தொகையை இதற்காகச் செலவு செய்கிறது.

இந்திய அரசு கடந்த ஆண்டு கச்சா எண்ணெய்க்காக 157.5 பில்லியன் டாலர் செலவு செய்திருந்த நிலையில், 2023-2024 நிதியாண்டில் ரஷ்யாவின் தள்ளுபடி விலை கச்சா எண்ணெய் கிடைத்த காரணத்தால் 132.4 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகையை மட்டுமே செலவு செய்யப்பட்டு உள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதி அளவில் பெரிய மாற்றங்கள் இல்லாத வேளையிலும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்ட வேளையிலும் கச்சா எண்ணெய்க்கான செலவு 15.9 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. 2022 - 2023 ஆம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் செலவு 30.4 சதவீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் (Petroleum Planning and Analysis Cell) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2023-24 நிதியாண்டில் இந்தியா 232.5 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.
இது முந்தைய நிதியாண்டை விட 0.1 சதவீதம் குறைவு மட்டுமே. இருப்பினும், இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, இறக்குமதி அளவு கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையை விட அதிகமாகவே உள்ளது.
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் இறக்குமதி அளவு 2023-24 நிதியாண்டில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த இரண்டு நிதியாண்டுகளில் 87.4 சதவீதம் மற்றும் 85.5 சதவீதமாக இருந்த இது, 2023-24 நிதிய ஆண்டில் 87.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பெட்ரோலியம் பொருட்களின் நுகர்வு அடிப்படையில் கணக்கிடப்பட்டால், மார்ச் மாதத்தில் இறக்குமதி சார்ந்த கச்சா எண்ணெய் அளவு 88 சதவீதத்தை எட்டியுள்ளது.
இறுதியாக இந்த லாபம் மக்களுக்கு சென்றடையவில்லை என்பது தான் முக்கியமாக விஷயம், இந்தியாவில் 600 நாட்களுக்கும் அதிகமாக பெட்ரோல், டீசல் குறையாமல் வைத்துள்ளது மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள்.
பொது தேர்தல் நாள் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக 2024 ஆம் நிதியாண்டு முடிய 15 நாட்கள் மட்டுமே இருந்த வேலையில் பெட்ரோல், டீசல் விலை 663 நாட்களுக்குப் பின்பு இந்தியா முழுவதும் எவ்விதமான பாகுபாடுமின்றி லிட்டருக்கு 2 ரூபாய் குறைந்தது மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் (IOC), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (HPCL) நிறுவனங்கள். இந்த விலை குறைப்பு மார்ச் 15ஆம் தேதி காலை 6 மணி முதல் அமலாக்கம் செய்யப்பட்டது.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications