பாகிஸ்தான் வழியாக ரஷ்யா- இந்தியாவுக்கு இடையில் புதிய ரயில் பாதை.. இனி வர்த்தகத்தை யாராலும் தடுக்க முடியாது!

பெரும்பாலான நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் கடல்வழிப் பாதையின் மூலமாகவே நடக்கிறது. ஆனால் ஈரான் அமெரிக்கா இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தின் போது ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்ததால் வர்த்தகம் பெரிதும் பாதித்தது. இந்நிலையில் ரஷ்யா இந்தியாவுடனான வர்த்தகத்தை வலுப்படுத்தும் விதமாக புதிய ரயில் வழி பாதையை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.

ரஷ்யத் துணை பிரதமரான மராட் குஸ்னுல்லின், ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு இடையில் ஒரு ரயில் பாதையை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக இந்த பாதை அமைக்கப்படும் வாய்ப்புள்ளது.

பாகிஸ்தான் வழியாக ரஷ்யா- இந்தியாவுக்கு இடையில் புதிய ரயில் பாதை.. இனி வர்த்தகத்தை யாராலும் தடுக்க முடியாது!

இந்தியாவும், ரஷ்யாவும் நீண்ட காலமாக நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. இந்தியா அதிக அளவில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் ஆகியவற்றை வாங்கி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் எப்போதும் கடல்வழிப் பாதையை மட்டுமே நம்பி இருப்பதற்கு பதிலாக ஒரு ரயில் பாதையை அமைத்தால் வர்த்தகம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதற்காகவே இத்தகைய யோசனையை முன்மொழிந்துள்ளார் அந்நாட்டு துணை பிரதமர்.

ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாஸ்பரஸ் ஜலசந்தி ஆகிய இரண்டு முக்கிய கடல் வழிப்பாதைகள் தான் உலக நாடுகளுக்கு முக்கிய வர்த்தகப் பாதையாக இருக்கிறது. இந்தியா மட்டுமல்ல பிற உலக நாடுகளுக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு போன்றவற்றைக் கொண்டு செல்ல இந்த 2 பாதைகளும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

Also Read

ஆனால் போர் பதற்றம் ஏற்பட்டால், இந்தப் பாதையில் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டு சப்ளை பாதிக்கப்படும். அது மட்டுமின்றி இந்த கடல் வழி பாதைகளுக்கு பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் கப்பல் வாடகையும் சரி.. காப்பீட்டுத் தொகையும் சரி சற்று கூடுதலாகவே இருக்கும். இதற்கு மாற்றாக ஒரு ரயில் பாதையை அமைத்தால் எந்த பிரச்சனையும் இன்றி வர்த்தகம் நடைபெறும்.

கப்பல் போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்துக்கு செலவு குறைவு தான். ஒருவேளை துணை பிரதமரின் ஆலோசனைப்படி இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டாலும் பல நாடுகளின் வழியே அமைக்கப்பட வேண்டும். அதற்கும் சில கஷ்டம்ஸ் பீஸ் மற்றும் வர்த்தக விதிகளை எல்லாம் அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்ட பிறகே முடிக்க முடியும். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியே ரயில் பாதை அமைக்கப்படும் போது சில பிரச்சினை ஏற்படும் வாய்ப்புள்ளது. இதுவும் எந்த அளவுக்கு சுமூகமாக முடியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+