மாஸ்கோ: ரஷ்யா மத்திய வங்கியின் தலைவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் அந்நாட்டின் பொருளாதாரம் 2022 ஆம் ஆண்டில் சுமார் 3 சதவிகிதம் வரையில் சரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில் பதிவான வளர்ச்சியின் அளவில் இருந்து 2022 ஆம் ஆண்டில் பெரும் சரிவை பதிவு செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 2021 வளர்ச்சியை ஒப்பிடுகையில் 2022ல் - 3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த பொருளாதாரத் தடைகள் மற்றும் சர்வதேச நிறுவனம் வெளியேறியது மூலம் அந்நாட்டின் பொருளாதாரம் -3 சதவீதமாகச் சரிந்துள்ளது.
ரஷ்யா மத்திய வங்கி
ரஷ்யா மத்திய வங்கியின் கவர்னர் எல்விரா நபியுல்லினா வெள்ளிக்கிழமை வங்கிக் நிர்வாகக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில் பணவீக்க பாதிப்பில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகக் கூறினார்.
மோசமான வர்த்தக நிலைமை
இதேபோல் ரஷ்யாவுக்கு வெளிநாடுகள் உடனான மோசமான வர்த்தக நிலைமைகள் இந்தப் பெரும் சரிவுக்கு முக்கியக் காரணியாக உள்ளது என்றும் விளக்கம் கொடுத்துள்ளார். டிசம்பர் மாத வரையிலான தரவுகள் படி ரஷ்யாவின் வருடாந்திர பணவீக்கம் 12.7 சதவீதமாக உள்ளது என எல்விரா நபியுல்லினா கூறினார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி
ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டுச் சுமார் 4.8 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு ரஷ்யா - உக்ரைன் போரும், அதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புகளாலும் அந்நாட்டின் பொருளாதாரம் 2022ல் ஆம் ஆண்டில் -3 சதவீதமாக உள்ளது.
முக்கியமான பிப்ரவரி மாதம்
பிப்ரவரி மாதம் இறுதியில் உலக நாடுகளின் பல எதிர்ப்புகளைக் கடந்து பல வருடமாக இருக்கும் பிரச்சனையைப் போர் மூலம் தீர்க்கலாம் என முடிவு செய்த ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைனுக்குத் தனது படைகளை அனுப்பியது.
தடைகள்
ரஷ்யாவின் முடிவை எதிர்த்துப் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள், வர்த்தகத் தடைகள், நிதியியல் தடைகள் எனப் பலவிதமான தடைகளை விதித்தது. இதனால் ரஷ்யாவில் இயங்கி வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து வெறும் கையுடன் வெளியேற வேண்டிய நிலை உருவானது.
கச்சா எண்ணெய் விலை
இதனால் ரஷ்யாவின் வர்த்தகம் கடுமையாகப் பாதித்த நிலையில், ரஷ்யா உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் செக் வைக்கும் விதமாகத் தனது கச்சா எண்ணெய், எரிவாயு சப்ளையை ரத்து செய்தது. இதனால் ஒட்டுமொத்த ஐரோப்பாவும் தற்போது பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ளது.
ஜி7 நாடுகள்
இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து நாடுகளும் இணைந்து, இதில் குறிப்பாக ஜி7 நாடுகள் ரஷ்யாவின் நிதி நிலையை மேலும் மோசமாக்க ரஷ்யாவின் முக்கிய ஏற்றுமதிகளில் ஒன்றான ரஷ்ய கச்சா எண்ணெய் மீது இந்த மாதம் விலை வரம்பை விதித்தது.
60 டாலர் விலை
அதாவது உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து 60 டாலர் விலைக்கு மட்டுமே ரஷ்ய கச்சா எண்ணெய் விற்பனை செய்ய முடியும் என அறிவித்துள்ளது. இதேபோல் 60 டாலருக்கு மேல் பிற நாடுகளுக்கு விற்பனை செய்யும் போது இன்சூரன்ஸ், கப்பல்கள் அளிக்கப்படாது என அறிவித்துள்ளது.
ஐரோப்பா
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கப்பல் வழியாக வாங்கும் கச்சா எண்ணெய்-க்குத் தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் ஜனவரி மாதம் முதல் ரஷ்யா வருவாய் இழப்பால் பாதிக்கப்படும், ஐரோப்பிய யூனியன் கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் பாதிக்கப்பட உள்ளது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?



Click it and Unblock the Notifications