ரஷ்யா: உலகப் புகழ்பெற்ற டெக் நிறுவனமான கூகுளுக்கு உலகில் உள்ள மொத்த செல்வத்தை விட அதிக தொகையை ரஷ்ய நீதிமன்றம் அபராதமாக விதித்திருப்பது தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது.
ரஷ்ய நீதிமன்றம் கூகுள் நிறுவனம் 20 டெசிலியன் டாலர் தொகையை அபராதமாக கட்ட வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் டெசிலியன் என்பது 1 என்ற எண்ணுக்கு பின்னால் 34 பூஜ்யம் வரும். அந்த வகையில் ரஷ்ய நீதிமன்றம் கூகுள் நிறுவனத்திற்கு 20 டெசிலியன் டாலர்கள் தொகையை அபராதமாக விதித்துள்ளது.

முன்னதாக ரஷ்ய நீதிமன்றம் கூகுள் நிறுவனம் ஒரு நாளைக்கு 1200 டாலர்களை அபராதமாக செலுத்த வேண்டும் எனக் கூறியிருந்தது. ஆனால் கூகுள் அதனை ஏற்காததை அடுத்து ஒவ்வொரு நாளும் இந்த அபராத தொகையானது இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டு வந்தது.
அதாவது தற்போது கூகுள் நிறுவனம் ரஷ்யாவுக்கு இரண்டுக்குப் பின்னால் 34 பூஜ்யங்கள் எண் கொண்ட டாலர்களை அபராதமாக செலுத்த வேண்டும். சர்வதேச நாணய நிதியம் வெளியிடும் தகவலின் படி உலகத்தின் மொத்த ஜிடிபியே 110 டிரில்லியன் டாலர்கள் தான். 20 டெசிலியன் என்றால் 20,000,000,000,000,000,000,000,000,000,000,000.
ஆனால் அதைவிட அதிகமான தொகையை ரஷ்யா கூகுளுக்கு அபராதமாக விதித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடங்கிய போது யூட்யூபில் ரஷ்ய அரசு நடத்தி வந்த சேனல்களுக்கு யூடியூப் தடை விதித்தது.
இந்த தடையை நீக்க கோரி யூடியூப்பின் தாய் நிறுவனமான கூகுளின் ஆல்பபெட் மீது பல்வேறு ரஷ்ய நிறுவனங்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த ரஷ்ய நீதிமன்றம் இந்த சேனல்களின் தடை நீடிக்கும் ஒவ்வொரு நாளும் கூகுள் நிறுவனம் 1028 டாலரை அபராதமாக செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்தது. தீர்ப்பு வெளியான நாளிலிருந்து தற்போது வரை அபராத தொகையை கூட்டிப் பார்க்கும்போது அது 20 டெசிலியன் டாலர்கள் என்ற அளவை தொட்டுள்ளது.
உலகில் உள்ள மொத்த பணத்தை சேர்த்தாலும் இந்த அபராத தொகையை நெருங்க கூட முடியாது எனலாம். ரஷ்ய நீதிமன்றம் இந்த அபராத தொகையை விதித்தது தொடர்பாக கூகுள் தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு அறிக்கையும் வெளிவரவில்லை. பல்வேறு செய்தி நிறுவனங்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் கூகுள் தரப்பிலிருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
ரஷ்யாவில் யூடியூப் தளம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் அரசுக்கு சொந்தமான சேனல்கள் தொடர்ந்து முடக்கத்திலேயே இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் தங்கள் நாட்டில் யூடியூப் முற்றிலுமாக தடை செய்யப்படும் என ரஷ்ய அரசு எச்சரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications