ரஷ்ய அரசின் புதிய வெளியுறவு கொள்கையில் இந்தியா இனி முக்கிய பங்கு வகிக்கும் என விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இது மட்டும் அல்லாமல் முதலீடு, வர்த்தகம் என பல துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் எனவும் ரஷ்ய அரசு தனது வெளியுறவு கொள்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான ராஸ்நெப்ட் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவை முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
இந்த முடிவின் மூலம் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலையில் முக்கிய மாற்றத்தை துபாய் கொண்டு வர போகிறது.
உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா போருக்கு பின்பு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் அளவு வேகமாக அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையராக சவுதி, ஈரான் நாடுகளை ஓரம்கட்டிவிட்டு ரஷ்யா முதல் இடத்தை பிடித்துள்ளது.
கச்சா எண்ணெய்
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்-ஐ இந்தியா பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் 30 முதல் 40 சதவீத டிஸ்கவுன்ட் உடன் பெற்று வருகிறது. இதன் மூலம் இந்தியா - ரஷ்யா மத்தியிலான கச்சா எண்ணெய்-க்கு பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயம் செய்கிறது.
Rosneft மற்றும் இந்தியன் ஆயில்
இந்த நிலையில் Rosneft மற்றும் இந்தியன் ஆயில் கார்ப் ஆகியவை துபாய் கச்சா எண்ணெய்-யின் ஆசிய விலை நிலவரத்தை பென்ச்மார்க் ஆக நிர்ணயம் செய்துள்ளது. சமீபத்தில் இந்தியன் ஆயில் வாங்கிய கச்சா எண்ணெய் கூட துபாய் விலை நிலவரத்தை தான் பென்ச்மார்க் ஆக நிர்ணயம் செய்துள்ளது.
ஐரோப்பா-வுக்கு கட்
ரஷ்யா அரசு உத்தரவின் பெயரில் ஒரு துளி கச்சா எண்ணெய் கூட ஐரோப்பாவிற்கு விற்பனை செய்யப்படுவது இல்லை, இதனால் ஐரோப்பிய சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா கூடுதலான தொகையை கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது, இதை மாற்றும் விதமாக துபாய் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு கூடுதல் நன்மை
இது மட்டும் அல்லாமல் இந்தியா ரஷ்யாவுக்கு ரூபாய் அடிப்படையில் தான் பேமெண்ட் அளித்து வருகிறது, இது இந்தியாவுக்கு கூடுதல் நன்மை. ஐரோப்பாவிற்கு இணையான ஏற்றுமதியை இந்தியாவுக்கு அனுப்ப திட்டமிடும் ரஷ்யா மார்ச் 29ஆம் தேதி செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி ரஷ்யாவின் ராஸ்நெப்ட், இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கான ஏற்றுமதியை 2 மடங்கு அதிகரிக்க திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
15 லட்சம் டன் டார்கெட்
ஏப்ரல் மாதம் முதல் ரஷ்யாவின் ராஸ்நெப்ட் மட்டும் ஒரு மாதத்திற்கு சுமார் 15 லட்சம் டன் கச்சா எண்ணெய்-ஐ இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
22 மடங்கு உயர்வு
இதேவேளையில் ரஷ்ய துணை பிரதமரான Alexander Novak செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவுக்கு ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விற்பனை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 22 மடங்கு அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications