ரஷ்யா நம்பகமானது அல்ல.. இந்தியாவுக்கு சூசகமாக சொல்லும் அமெரிக்கா.. ஏன் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஷியாவை சார்ந்திருக்கும் நிலையை இந்தியா குறைத்து கொண்டுள்ளது. எனினும் அது இந்தியாவின் சொந்த இருதரப்பு விவகாரம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ், உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, எரிபொருள் மற்றும் பாதுகாப்பு உதவியில் நம்பகத்தன்மை வாய்ந்த நாடாக இல்லை என தெரிவித்துள்ளார்.

ரஷ்ய பயணத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஐ.நா.வில் பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என தெளிவுப்படுத்தி இருக்கின்றனர்.

இந்திய பொருளாதாரம் குறித்து ஆச்சரியப்பட்ட அமெரிக்க நிதியமைச்சர்!இந்திய பொருளாதாரம் குறித்து ஆச்சரியப்பட்ட அமெரிக்க நிதியமைச்சர்!

இந்தியாவின் நிலைப்பாடு

இந்தியாவின் நிலைப்பாடு

இதனால், போருக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. தூதுரக முறையில், பேச்சுவார்த்தை வழியே போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா விரும்புகிறது. உக்ரைனின் நலனை இந்தியா கவனத்தில் கொண்டு உள்ளது.

பொருளாதார, தூதரக, சமூக மற்றும் அரசியல் வலிமை கொண்ட இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து, இந்த செய்தியை ரஷ்யா கேட்டுள்ளதை சுட்டி காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் விருப்பம்

அமெரிக்காவின் விருப்பம்

இந்தியாவுடன் பொருளாதாரம், பாதுகாப்பு உறவுகள் மற்றும் ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் நல்லுறவை பேணவும், ஆழப்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம் என நெட் பிரைஸ் கூறியுள்ளார்.

நெட் பிரைஸின் இந்த கருத்தானது இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் பல்வேறு வணிகங்கள் குறித்து தீவிரமாக பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில் வந்துள்ளது.

ரஷ்யா - இந்தியா வணிகம்

ரஷ்யா - இந்தியா வணிகம்

ஆரம்பத்தில் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து அதிருப்தி தெரிவித்த நாடுகளுக்கு, இந்திய மக்களின் நலன் முக்கியம். அவர்களுக்கு என்ன தேவையோ அதனைத் தான் நாங்கள் செய்கிறோம் என பிடிவாதமாக இருந்தது. தொடர்ந்து ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி வருகின்றது. அது மட்டும் அல்ல, இன்னும் பற்பல வணிகம் குறித்து தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்தியா ஆதரவு

இந்தியா ஆதரவு

ஆரம்பத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதிருப்தியினை காட்டினாலும் , சமீபத்திய வாரங்கள் மற்றும் மாதங்களில் அமெரிக்கா மற்றும் இந்திய சகாக்களுக்கு இடையே பல உயர்மட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியா உக்ரைன் போருக்கு எதிராக நிற்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உக்ரைன் ரஷ்யா பிரச்சனைக்கு முடிவு காண விரும்புகிறது.

முக்கியமான செய்தி

முக்கியமான செய்தி

உலகெங்கிலும் இருந்து இதுபோன்ற செய்தியினை கேட்பது ரஷ்யாவுக்கு முக்கியமான செய்தியாக இருக்கும். குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இருந்து கேட்பது மிக முக்கியமானது.

ரஷ்யாவை சார்ந்திருக்கும் நிலையை இந்தியா குறைத்து கொண்டுள்ளது. எனினும் அது இந்தியாவின் சொந்த இருதரப்பு விவகாரம். இந்தியா ரஷ்யாவினை சார்ந்திருப்பதை குறைப்பது, உக்ரைனின் நலன் மட்டும் அல்ல. உலக நாடுகளுக்கும் நலன் ஆகும்.

ரஷ்யா இந்தியா உறவு வலிமையானது?

ரஷ்யா இந்தியா உறவு வலிமையானது?

எனினும் சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு மிகவும் வலிமையானது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யா மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், முதல் முறையாக மாஸ்கோ சென்ற செர்கி லாரோவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு வலிமையானது என்று கூறியிருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russia not reliable, US on India's Crude Oil Trade with Moscow

India has reduced its dependence on Russia. However, it is India's own bilateral issue, US State Department spokesperson Ned Price said
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X