ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் சர்வதேச வர்த்தகத்தை தலைகீழாக புரட்டிப்போட்டு உள்ளது என்றால் மிகையில்லை, ஒருபக்கம் ரஷ்யா தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளை-ஐ கட்டுப்படுத்தி ஒட்டுமொத்த ஐரோப்பா-வையும் குளிரில் நடுங்க வைத்தது மட்டும் அல்லாமல் தற்போது ஜெர்மனியை ரெசிஷனுக்கு தள்ளியுள்ளது.
இதை தொடர்ந்து ரஷ்யாவில் இருக்கும் சர்வதேச நிறுவனங்கள் G7 நாடுகளின் தடைகளை தொடர்ந்து விட்டால் போதுமென ஓடிய நிலையில் தற்போது நிலைமை எப்படியிருக்கிறது..? ரஷ்யாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் நிலை என்ன..?

உக்ரைன் நாட்டிற்கு உலக நாடுகள் பெரிய அளவில் உதவி செய்து வருவதால், ரஷ்யாவின் கடுமையான தாக்குதலை மீறியும் உக்ரைன் தொடர்ந்து ரஷ்யா மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் ரஷ்யாவில் உக்ரைன் ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்திய நிலையில், ரஷ்யா தற்போது மிகப்பெரிய டிரோன் தாக்குதலை கட்டவிழ்த்து உள்ளது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் ரஷ்யாவில் இயங்கி வந்த வெளிநாட்டு நிறுவனங்களில் 500 நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை நிறுத்தியுள்ளது, 500 நிறுவனங்கள் மொத்தமாக வெளியேற்றியுள்ளது. 151 வெளிநாட்டு நிறுவனங்கள் ஊழியர்களை குறைத்துள்ளது, 175 நிறுவனங்கள் வர்த்தகத்தை மூடும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளது, 230 நிறுவனங்கள் தடையை மீறி தொடர்ந்து வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதேவேளையில் ரஷ்யாவில் பல முன்னணி வெளிநாட்டு பிராண்டுகளின் பொருட்கள் தற்போது மாற்று பெயருடனும், புதிய பேகேஜிங் உடன் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வெளிநாட்டு பிராண்டுகளும், தயாரிப்புகளும் தொடர்ந்து ரஷ்யாவில் கிடைத்து வருகிறது. ஆனால் உரிமையாளரும், அடையாளமும் வேறு அவ்வளவு தான்.
வெள்ளிக்கிழமை ஐரோப்பிய நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் தனது ரஷ்ய வர்த்தகம், தொழிற்சாலை, 4000 ஊழியர்கள் என அனைத்தையும் ரஷ்யாவின் முன்னணி டீலரான Avilon-க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இதேவேளையில் Burger King, Carl's Jr ஆகிய பிராண்டு கடைகள் ரஷ்யாவில் CKE Restaurents நிறுவனத்திற்கு சொந்தமான Restaurant Brands International பிராண்ட் நிறுவனங்களை வைத்துள்ளது. இவை தொடர்ந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோ உட்பட நாடு முழுவதும் தொடர்ந்து இயங்கும் என அறிவித்துள்ளது. இதேபோல் பல வெளிநாட்டு பிராண்டுகள் ரஷ்யாவில் இன்னும் அதே பெயரில் இயங்கியும், விற்பனையும் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications