இந்தியாவின் நீண்டகால நட்பு நாடான ரஷ்யா, பாகிஸ்தானுடன் ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்திட்டு, இந்திய மக்களுக்கு பதற்றத்தை கொடுத்துள்ளது. இந்தியா எதிர்கொண்ட பல போரில் தோலுக்கு தோல் கொடுத்து உதவிய நாடு தற்போது பாகிஸ்தான் உடன் முக்கிய திட்டத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கும் சோவியத் காலத்தில் கட்டப்பட்ட ஒரு ஸ்டீல் ஆலையை, மீண்டும் இயக்குவதற்கு ரஷ்யா உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முடிவு இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது உண்மையில்லை என தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் - ரஷ்யா மத்தியிலான ஒப்பந்தம் தெற்காசியாவில் பொருளாதார உறவுகளை மறுவரையறை செய்யலாம் மற்றும் இந்தியா-ரஷ்யா உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. ரஷ்ய தூதர் டெனிஸ் நஸ்ருயேவ் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் சந்தித்து இந்த ஒப்பந்தம் உறுதி செய்த நிலையில், 2015ல் பழைய இயந்திரங்கள் மற்றும் மோசமான நிர்வாகத்தால் மூடப்பட்ட பாகிஸ்தான் ஸ்டீல் உற்பத்தி ஆலைகளை (PSM) புதிய தொழில்நுட்பம் நவீனமயமாக்கப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது கூறப்பட்டது.

மே 13 அன்று பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் ஹரூன் அக்தர் கான் மற்றும் ரஷ்ய தூதர் டெனிஸ் நஸ்ருயேவ் இடையே நடந்த கூட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, பாகிஸ்தான் ஊடகங்கள், ரஷ்யாவும் பாகிஸ்தானும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், கராச்சியில் எஃகு ஆலைகளை அமைப்பதற்கு திட்டமிட்டதாகவும் கூறின. ஆனால், மாஸ்கோ இந்த அறிக்கைகளை முற்றிலும் மறுத்து, எவ்வித பெரிய ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என்று தெளிவுபடுத்தியது. ரஷ்யா, பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான அறிக்கைகளை "பொய்யானவை" என்று மறுத்துள்ளது. இதை அரசு செய்தி நிறுவனமான ஆகாஷ்வாணியின் நியூஸ்ஆன்ஏர்-ல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரஷ்ய மூத்த அதிகாரி ஒருவர் இந்த அறிக்கைகளை "மிகைப்படுத்தப்பட்டவை" என்று விமர்சித்து, இவை இந்தியா-ரஷ்யா உறவுகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பரப்பப்பட்டவை என்று கூறினார். குறிப்பாக, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள சில தரப்பினர் இந்த "பொய்யான" அறிக்கைகள் மூலம் பதற்றத்தை உருவாக்க முயன்றதாக ரஷ்யா குற்றம்சாட்டுகிறது.
முன்பு வெளியான செய்தியில், 1973ல் சோவியத் ஆதரவுடன் கட்டப்பட்ட இந்த ஆலை, ஆண்டுக்கு 1.1 மில்லியன் டன் ஸ்டீல் உற்பத்தி செய்தது. கராச்சி அருகே 19,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஆலைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 700 ஏக்கர் பகுதியில் புதிய தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலையில் பாகிஸ்தானின் 1.4 பில்லியன் டன் இரும்புத் தாது இருப்புகளைப் பயன்படுத்தும்.
நவீன ரஷ்ய ஸ்டீல் உற்பத்தி தொழில்நுட்பத்துடன் இயக்கப்படும் இந்த ஆலை, பாகிஸ்தானின் ஆண்டு ஸ்டீல் இறக்குமதி செலவை 30% குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 2.6 பில்லியன் டாலர் அளவிலான அந்நிய செலவினங்களை சேமிக்கும்.
பாகிஸ்தான் எஃகு ஆலைகள், ஊழல் மற்றும் மோசமான பராமரிப்பால் 2.14 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்து 2015ல் மூடப்பட்டன. இந்த மறு இயக்கத் திட்டம், பாகிஸ்தானின் உள்நாட்டு எஃகு உற்பத்தியை மேம்படுத்தி, இறக்குமதி சார்பை குறைக்கும்.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும், பாகிஸ்தான் 324 மில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்டீல் கழிவுகள் மற்றும் முழுமையாக முடிக்கப்படாத பொருட்களை இறக்குமதி செய்ததுள்ளது. இந்த செலவைக் குறைக்க புதிய ஆலை உதவும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இது பாகிஸ்தானின் பொருளாதார மீட்சிக்கு உதவுவதோடு, ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும். இந்த ஒப்பந்தம், பாகிஸ்தானுக்கு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப நன்மைகளை வழங்கும் என கூறப்பட்டது. ஆனால் இப்போது இந்த செய்திகள் அனைத்தும் பொய் என விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications