மாஸ்கோ: மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டிருக்கும் ரஷ்யா, இந்தியாவிற்கு நிலக்கரி ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. பொதுவாக சீனா தான் ரஷ்யாவிடமிருந்து அதிகப்படியான நிலக்கரியை வாங்கும் ஒரு நாடாக இருக்கிறது. ஆனால் தற்போது சீனா நிலக்கரியை கொண்டு மின்சாரம் தயாரிப்பதை படிப்படியாக குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
இதன் காரணமாக நிலக்கரி இறக்குமதியையும் குறைத்துக் கொள்ள சீனா முடிவு செய்துள்ளது. எனவே ரஷ்யா சீனாவுக்கு அடுத்தபடியாக நிலக்கரி மூலம் அதிக மின்சாரம் தயாரிக்க நாடான இந்தியாவிற்கு நிலக்கரி ஏற்றுமதியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

சீனாவை தொடர்ந்து இந்தியாவிற்கான நிலக்கரி ஏற்றுமதியை அதிகரிக்க ஆர்வம் காட்டுகிறோம் என ரஷ்யாவின் துணை பிரதமரான அலெக்சாண்டர் நோவாக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே மின்சார உற்பத்திக்காக மாற்று எரிசக்தி நடைமுறைகளில் கவனம் செலுத்தினாலும் நிலக்கரி சார்ந்த மின்சார உற்பத்தி தேவை இந்தியாவில் தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது.
இந்தியாவை பொருத்தவரை நிலக்கரி உற்பத்தி கடந்த நிதியாண்டில் 997.828 மில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரித்தது. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 12 சதவீதம் அதிகமாகும்.
அதாவது 2023 ஆம் ஆண்டின் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தில் சுமார் 75 சதவீதம் நிலக்கரியில் இருந்து தான் உற்பத்தி செய்யப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் இந்தியா 176 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது.ச் இதில் பெரும்பாலானவை மின்சார உற்பத்திக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவை பொறுத்தவரை கடந்த ஆண்டு 26.2 மில்லியன் டன் நிலக்கரியை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 2022 ஆம் ஆண்டில் 20 மில்லியன் டன்களாக இருந்தது.
ஏற்கனவே ரஷ்யா இந்தியாவிற்கு பெருமளவிலான கச்சா எண்ணெயை விற்பனை செய்து வருகிறது. இத்துடன் நிலக்கரி விற்பனையும் அதிகரிப்பதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளது. உக்ரைனுடனான சண்டையை தொடர்ந்து பல்வேறு மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டன. மேலும் ரஷ்ய நிறுவனங்களுக்கு பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதன் காரணமாக ரஷ்யா தள்ளுபடி விலையில் இந்திய நிறுவனங்களுக்கு கச்சா எண்ணெயை விற்பனை செய்து வருகிறது. தற்போது கச்சா எண்ணெயயுடன் நிலக்கரி ஏற்றுமதியையும் ரஷ்யா அதிகரிக்க முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக தள்ளுபடி விலையில் கூட நிலக்கரியை வழங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தியை குறைக்க வேண்டும் அதே வேளையில் சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட மாற்று சக்திகள் வழியே மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறது. இருந்தாலும் நாட்டில் மின்சார தேவை அதிகரித்துள்ளதால் உடனடியாக நிலக்கரி மூலம் மின்சார தயாரிப்பை குறைக்க முடியாத சூழல் உண்டாகியுள்ளது.
Written by: Devika
More From GoodReturns

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications