மாஸ்கோ, ரஷ்யா: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான மோதல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்பதற்காக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார ரீதியாக பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.
இது ரஷ்யாவின் பொருளாதாரம் மட்டுமில்லாமல் அங்கு தொழிலாளர்களுக்கான பற்றாக்குறையையும் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே ரஷ்யா ஒரு புதிய யுக்தியை கையில் எடுத்திருக்கிறது. ரஷ்யாவில் வெளியாக கூடிய தி மாஸ்கோ டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள உரால் பகுதிக்கான வணிகத்துறை தலைவரான ஆண்ட்ரி பெசிடின் அளித்துள்ள பேட்டியில் தொழிலாளர் பற்றாக்குறையை போக்க இந்தியாவின் உதவியை நாடி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிலிருந்து பத்து லட்சம் பேரை வேலைக்கு எடுத்து ரஷ்யா அழைத்து வர இருப்பதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக இந்தியாவுடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாக ஆண்ட்ரி பெசிடின் தெரிவித்திருக்கிறார். இந்தியாவை சேர்ந்த 10 லட்சம் நிபுணர்கள் ரஷ்யாவிற்கு வருவார்கள் என்றும் ரஷ்யாவின் Sverdlovsk உள்ளிட்ட அனைத்து பிராந்தியங்களிலும் அவர்கள் பணிபுரிவார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 10 லட்சம் இந்தியர்கள் ரஷ்யாவிற்கு வரவழைக்கப்பட இருக்கின்றனர் என அவர் உறுதிப்படுத்த தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு வருகை தரும் தொழிலாளர்களை தங்க வைப்பது அவர்களுக்கான உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவது தொடர்பாக ரஷ்யா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
உக்ரைன் போரால் ரஷ்யாவில் பெரிய அளவிலான ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. பற்றாக்குறையை தீர்ப்பதற்காகவே இப்படி ஒரு திட்டத்தை ரஷ்யா கையில் எடுத்திருக்கிறது . ரஷ்யாவை சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் உக்ரைன் போரில் பங்கேற்பதற்காக சென்று விட்டதால் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளை சமாளிக்க ரஷ்ய அரசு Sverdlovsk பிராந்தியத்தில் புதிய தொழில் பூங்காக்களை உருவாக்கி வருகிறது. இங்கே பணியாற்றுவதற்காக தான் பெரும்பாலான இந்தியர்கள் அழைத்து வரப்பட இருக்கின்றனர் என அவர் கூறியிருக்கிறார். இவர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சார்ந்து இயங்கக்கூடிய துறைகளில் எல்லாம் பணியில் அமர்த்தப்படுவார்களாம். அது தவிர கட்டுமானம் ,லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கிடங்குகளை மேலாண்மை செய்வது உள்ளிட்ட பணிகளில் இவர்கள் பணியமர்த்தப்பட இருக்கின்றனர்.
பொதுவாக ரஷ்யா தங்கள் நாட்டில் வேலை செய்வதற்கு சோவியத் ஒன்றிய நாடுகளில் இருந்து தான் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும். ஆனால் இந்த போர் ரஷ்யாவின் கொள்கையை மாற்றி அமைக்க வைத்திருக்கிறது. இவ்வாறு ரஷ்யாவிற்கு வேலை செய்ய வரும் இந்தியர்களுக்கு மொழி மற்றும் கலாச்சார பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் அதனை தீர்ப்பதற்காக பயிற்சி மையங்களை இரு நாடுகளிலும் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறியிருக்கிறார்.
குறிப்பாக இவர்கள் Sverdlovsk பிராந்தியத்தில் வேலை செய்ய உள்ளனர் இங்கே ஜனவரி மாதங்களில் பயங்கரமான பணி காணப்படும் மைனஸ் 17 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் என்பதால் அதில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் வேலை செய்வதற்காக 4000 இந்தியர்கள் விண்ணப்பம் செய்திருப்பதாகவும் அது தவிர மாஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கட்டுமான பணிகளில் இந்திய தொழிலாளர்கள் வேலை செய்து இருப்பதாகவும் ரஷ்ய அரசாங்கம் தெரிவிக்கிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications