கடுப்பான ரஷ்யா.. அமெரிக்காவின் முடிவுக்குச் செக்.. யாருக்கு யார் விலை சொல்வது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் முக்கியமான இடத்தில் கச்சா எண்ணெய் விலை இருக்கும் நிலையில், இதன் மூலம் ரஷ்யாவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

உலகம் முழுவதும் கிரீன் எனர்ஜிக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுக் கனிமவள எரிபொருளைப் பயன்படுத்துவதை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கச்சா எண்ணெய்க்கு இணையான மாற்று எரிபொருளை உருவாக்க முடியாது என்பது தான் உண்மை.

இந்த நிலையில் ஒட்டுமொத்த ஐரோப்பா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு ஒற்றை ஆதாரமாக இருக்கும் ரஷ்யா-வின் கச்சா எண்ணெய்-க்கு அமெரிக்கா தலைமையில் உக்ரைன் ஆதரவு நாடுகள் புதிதாக விலையை நிர்ணயம் செய்துள்ளது. இதற்கு ரஷ்யாவின் பதில் என்ன தெரியுமா..?

கஜானா-வில் ஓட்டை.. ரஷ்யா முடிவு என்ன? காத்திருக்கும் இந்தியா..!!கஜானா-வில் ஓட்டை.. ரஷ்யா முடிவு என்ன? காத்திருக்கும் இந்தியா..!!

60 டாலர்

60 டாலர்

ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 60 டாலர் என்ற விலையை நிர்ணயம் செய்துள்ளது.

ரஷ்யா

ரஷ்யா

அதாவது ரஷ்யா எந்த நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்றாலும் 60 டாலர் விலையில் தான் செலுத்த வேண்டும் என விலையை நிர்ணயம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை இந்த நாடுகள் இணைந்து ஒப்புக்கொண்டு உள்ளது.

 ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம்

இந்த 60 டாலர் விலை உடன் ஐரோப்பிய ஒன்றியம் கடல் வழியாக அனுப்பப்படும் ரஷ்ய எண்ணெய் மீதான தடை உத்தரவுடன் திங்கள்கிழமை அமலுக்கு வருகிறது. இதனால் இனி ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு துளி கச்சா எண்ணெய் கூட விற்பனை செய்ய முடியாது, அப்படிச் செய்தாலும் 60 டாலர் விலையில் தான் விற்பனை செய்ய வேண்டும்.

 அமெரிக்கா முடிவுக்குச் செக்

அமெரிக்கா முடிவுக்குச் செக்

இந்த நிலையில் ரஷ்ய அரசு அதிகாரிகள் அமெரிக்கா தலைமையில் உக்ரைன் ஆதரவு நாடுகள் நிர்ணயம் செய்துள்ள விலையைக் கட்டாயம் ஏற்க முடியாது என்றும், இந்த விலையை ஏற்கும் நாடுகளுக்கு உடனடியாகக் கச்சா எண்ணெய் சப்ளை கட் செய்யப்படும் என்ற எச்சரிக்கையும் வெளியிட்டு உள்ளது.

முடியாது முடியாது

முடியாது முடியாது

இது மட்டும் அல்லாமல் ரஷ்ய அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் Dmitry Peskov தற்போது இருக்கும் நிலவரத்தைக் கட்டாயம் ஆய்வு செய்ய உள்ளோம், ஆனால் ஒரு போதும் ரஷ்யாவுக்கான Price Cap-ஐ ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

வியன்னா

வியன்னா

இதேபோல் வியன்னாவில் உள்ள சர்வதேச அமைப்புகளுக்கான ரஷ்யாவின் நிரந்தரப் பிரதிநிதியாக இருக்கும் மிகைல் உல்யனோவ், 60 டாலர் விலை அளவு ஐரோப்பிய ஆதரவாளர்களே எதிர்ப்பார்கள் என எச்சரித்துள்ளார்.

ஐரோப்பாவுக்குச் செக்

ஐரோப்பாவுக்குச் செக்

இந்த ஆண்டு முதல் ஒட்டுமொத்த ஐரோப்பாவும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இல்லாமல் வாழும் என்று மிகைல் உல்யனோவ் ட்வீட் செய்துள்ளார். மேலும் ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான ஒரு பேரல் 60 டாலர் விலையை ஆதரிக்கும் நாடுகளுக்கு ரஷ்யா எண்ணெய் வழங்காது என்று ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.

கிண்டல்

கிண்டல்

காத்திருங்கள், மிக விரைவில் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா கச்சா எண்ணெய்-ஐ ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தைக் கிண்டல் செய்துள்ளார்.

வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரஷ்யாவின் எண்ணெய் மீது விதிக்கப்பட்ட 60 டாலரை 30 டாலராகக் குறைக்க வேண்டும். அப்போது தான் ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாகச் சரியும் எனத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான்-ஆ முடியாது முடியாது.. ரஷ்யா அறிவிப்பால் பெரும் சோகம்..!!பாகிஸ்தான்-ஆ முடியாது முடியாது.. ரஷ்யா அறிவிப்பால் பெரும் சோகம்..!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russia rejects $60 price cap on its crude oil, warns of EU oil supply cut

Russia rejects $60 price cap on its crude oil, warns of EU oil supply cut
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X