ரஷ்யாவின் ஒற்றை அறிவிப்பு.. உலக நாடுகள் பெரும் நிம்மதி.. அப்படி என்ன அறிவிப்பு தெரியுமா?

உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் உலக நாடுகள் பலவும், ரஷ்யா மீது பல்வேறு விதமான தடைகளை விதித்து வருகின்றன. ஆனால் உலக நாடுகள் ரஷ்யா மீது தடை விதிக்கின்றனவா? அல்லது ரஷ்யா உலக நாடுகள் மீது தடை விதிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் பலவும் பொருளாதார ரீதியாக ரஷ்யாவை தனிமை படுத்த ஒவ்வொரு திட்டமாக போட்டு வரும் நிலையில், அவற்றை ஒவ்வொன்றாக நோ பால் ஆக மாற்றி வருகின்றார் ரஷ்ய அதிபர் புடின்.

 எண்ணெய் வாங்க ஆர்வம்

எண்ணெய் வாங்க ஆர்வம்

உதாராணத்திற்கு ஆரம்பத்தில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை தடை செய்ய வேண்டும் என்று கூறின. ஆனால் ரஷ்யாவோ தள்ளுபடி விலையில் எண்ணெய் விற்பனை செய்து இழந்த சந்தையை ஈடுகட்டி வருகின்றது. ரஷ்யாவின் இந்த தள்ளுபடி சலுகையால் தற்போது பல்வேறு நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

தடைக்கல்லும் படிக்கல்

தடைக்கல்லும் படிக்கல்

இப்படி ஒவ்வொரு தடைக்கல்லையும் வெற்றி படிக்கட்டாக மாற்றி வரும் ரஷ்யா, மேற்கத்திய நாடுகளின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும், தக்க பதிலையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் கொடுத்து வருகின்றது. மொத்தத்தில் ரஷ்யாவினை முடக்க நினைத்து, மற்ற நாடுகள் சரிவு பாதையை காண ஆரம்பித்து விட்டன என்பதே உண்மை.

ரெசசன் அச்சம்

ரெசசன் அச்சம்

ஏனெனில் ரஷ்யா உக்ரைன் பிரச்சனையால் உலகமே இன்று மெதுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றன. உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ரெசசன் அச்சம் இருந்து வருகின்றன. சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக பணவீக்கம் மிக மோசமான உச்சத்தினை எட்டியுள்ளது.

வட்டி அதிகரிப்பு

வட்டி அதிகரிப்பு

மொத்தத்தில் ரஷ்யாவுக்கு பிரச்சனையை கொடுக்க வேண்டும் என்று நினைத்த நாடுகளில், இன்று பணவீக்கம் தலைவிரித்தாடி வருகின்றது. அதனை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இது இன்னும் எத்தனை காலத்திற்கு நீடிக்குமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.

கருங்கடல் ஒப்பந்தத்தில் பின்வாங்கல்

கருங்கடல் ஒப்பந்தத்தில் பின்வாங்கல்

இதற்கிடையில் ரஷ்யா தற்போது புதிய அவதாரத்திற்கு தயாராகி வருகின்றது எனலாம். இது ஐ நா மத்தியஸ்தம் கொண்ட கருங்கடல் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா பின்வாங்குதாக தெரிவித்துள்ளது.

இதனால் உலக நாடுகள் எவ்வளவு பெரிய நெருக்கடியை சந்திக்கும் என்பதை நினைத்து பார்த்தாலே கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது.

ஏற்றுமதியில் சிக்கல்

ஏற்றுமதியில் சிக்கல்

ஏனெனில் உலகளாவிய உணவு பொருட்களின் விலைகளைக் குறைக்க இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகின்றது.

ஏனெனில் கோதுமை மற்றும் பிற தானியங்கள் உற்பத்திக்கு பெயர் பெற்ற கருங்கடலின் சுற்றியுள்ள பகுதியின் ஏற்றுமதியை, ரஷ்யாவின் உக்ரைன் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. இதனால் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து தானியங்களை எடுத்து செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

பல ஆயிரம் டன் தானியங்கள் தேக்கம்

பல ஆயிரம் டன் தானியங்கள் தேக்கம்

இதனால் பல ஆயிரம் டன் தானியங்கள் கருங்கடல் பகுதிகளில் முடங்கின. இதனால் அந்த சமயத்தில் உலகளாவிய அளவில் தானியங்களின் விலையானது மிக மோசமாக பல வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. இதற்கிடையில் தான் கடந்த ஜூலை மாதம் ஐநா-வின் ஒப்பந்தம் ரஷ்யாவின் முற்றுகையை தளர்த்த வழிவகுத்தது. மூன்று முக்கிய உக்ரேனிய துறைமுகங்களை மீண்டும் ஏற்றுமதிக்காக அனுமதித்தது.

 விலைவாசி கட்டுக்குள்

விலைவாசி கட்டுக்குள்

ரஷ்யாவும் உக்ரைனும் கடந்த ஜூலை மாதம் துருக்கியில் ஐநா ஆதரவுடன் இந்த கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் காரணமாக மீண்டும் சோளம், கோதுமை, சூரியகாந்தி பொருட்கள், பார்லி, ராப்சீட் மற்றும் சோயா ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதனால் தான் தற்போது விண்ணைத் தொடும் விலைவாசியும் ஒரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது.

தற்போது என்னாச்சு?

தற்போது என்னாச்சு?

ரஷ்யா ட்ரோன் தாக்குதலுக்கு உக்ரைனை குற்றம் சாட்டும் நிலையில், கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா பின்வாங்கியுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால் மீண்டும், தானியங்கள் கருங்கடல் பகுதியில் தேங்கலாம். இதன் காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கம் உச்சம் தொடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

 உலக நாடுகள் அச்சம்

உலக நாடுகள் அச்சம்

அது மட்டும் அல்ல, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் உணவு நெருக்கடிக்கு இது வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக ரஷ்யாவின் இந்த முடிவு என்பது உலக நாடுகளில் மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகின்றது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் சிலவற்றிற்கும் தானிய ஏற்றுமதியினை உக்ரைன் தான் செய்து வருகின்றது.

தற்போது தான் ஓரளவுக்கேனும் விலைவாசி கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இது மேற்கொண்டு விலைவாசியினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிக அவசியமான ஒன்று

மிக அவசியமான ஒன்று

கருங்கடல் பகுதியில் செல்லும் சரக்குக் கப்பல்களின் பாதுகாப்பிற்கு ரஷ்ய தரப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது, ஒப்பந்தத்தை செயல்படுத்துவதை காலவரையன்றி நிறுத்துகிறோம் என அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையானது, உலகின் பிற பகுதிகளுக்கு உணவு மற்றும் உரங்களை ஏற்றுமதி செய்வதில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதனால் உலக நாடுகள் அனைத்துமே பாதிக்கப்படலாம். ஆக இந்த ஒப்பந்தத்தினை செயல்படுத்துவது மிக அவசியமானது.

யோசித்து முடிவெடுப்பது நல்லது?

யோசித்து முடிவெடுப்பது நல்லது?

ரஷ்யா இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதால், சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கலாம். மீண்டும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பணவீக்கம் தாண்டவமாடலாம். இந்தியா போன்று பிற நாடுகளிலும் பணவீக்கம் அதிகரிக்கும். மொத்தத்தில் தற்போதோ பல நாடுகளும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், அடுத்து என்ன நடக்குமோ? என்ற அச்சம் நிலவி வந்தது.

 மீண்டும் ஒப்பந்தத்தில் இணைப்பு?

மீண்டும் ஒப்பந்தத்தில் இணைப்பு?

இதற்கிடையில் தற்போது மீண்டும் கருங்கடல் ஒப்பந்தத்தில் இணையவுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இது விலைவாசியினை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இது பணவீக்கத்தினை குறைக்க உதவும் எனலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+