உக்ரைனின் ருத்ரதாண்டவம்.. கதிகலங்கி நிற்கும் ரஷ்யா.. மொத்தமும் காலி..!

உக்ரைன் - ரஷ்யா மத்தியிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, டிரம்ப் இரு நாடுகள் மத்தியில் Energy Ceasefire கொண்டு வந்த பின்பு ரஷ்யா ராணுவம் உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் இருக்கும் மின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதல் மூலம் ஒட்டுமொத்த கீவ் நகரமும் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது, இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இருக்கும் முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது.

உக்ரைனின் ருத்ரதாண்டவம்.. கதிகலங்கி நிற்கும் ரஷ்யா.. மொத்தமும் காலி..!

இந்த தாக்குதலில் ரஷ்யாவின் முன்னணி டெக் மற்றும் சமுக வலைத்தள நிறுவனமான VK-வின் (VKontakte) டேட்டா சென்டர் மீதும், அதற்கு முன்பு ரஷ்யாவின் கூகுள் என அழைக்கப்படும் Yandex நிறுவனத்திற்குச் சொந்தமாக 5 டேட்டா சென்டர்கள் மீது தாக்குதல் நடத்தியது. உக்ரைன் நடத்திய இந்த திட்டமிட்ட தாக்குதல் மூலம் தற்போது ஒட்டுமொத்த ரஷ்ய மக்களும் திண்டாடி வருகின்றனர்.

இதில் முக்கியமாக Yandex நிறுவனத்தின் டேட்டா சென்டர் வாயிலாகத் தான் ரஷ்ய மக்களுக்கான அனைத்து டிஜிட்டல் சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

Also Read

உக்ரைனின் தாக்குதல் மூலம் Yandex டேட்டா சென்டர்கள் பாதிக்கப்பட்டு உள்ள காரணத்தால் ரஷ்ய மக்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க முடியாமல், டாக்சி புக் செய்ய முடியாமல், உணவு ஆர்டர் செய்ய முடியாமல், ஏன் பலரின் வீடுகளில் டிஜிட்டல் லாக்கிங் சிஸ்டம் கூட வேலை செய்யவில்லை, வீட்டுக் கடன், பர்சனல் லோனுக்கான ஈஎம்ஐ செலுத்த முடியாமல் தவிப்பதாக மக்கள் புலம்பி வருவது மட்டும் அல்லாமல் தினசரி வாழ்க்கையே கடினமாக்கியுள்ளது உக்ரைனின் இந்த தாக்குதல்.

அக்டோபர் 8ஆம் தேதி முதல் நடத்து வரும் உக்ரைன் நாட்டின் தாக்குதல் மூலம் Yandex நிறுவனத்திற்குச் சொந்தமான 5 டேட்டா சென்டரில் 3 டேட்டா சென்டரில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

Recommended For You

இதன் மூலம் உக்ரைன் கச்சா எண்ணெய் தளம், மின்சார கட்டமைப்பு, சாலை போக்குவரத்து என பல உள்கட்டமைப்புகளைத் தாண்டி தற்போது டிஜிட்டல் கட்டமைப்புகள் மீது தாக்குதல் துவங்கியுள்ளது. ஈரானும் கிட்டத்தட்ட இதே நிலைப்பாட்டைத் தான் எடுத்துள்ளதாகவும் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் உக்ரைனின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு தாக்குதலுக்கு இணையாக ரஷ்யாவும் தாக்குதலைத் துவங்கியிருக்கும் காரணத்தால் விரைவில் டிஜிட்டல் அப்போகலிப்ஸ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Yandex நிறுவனத்தின் டேட்டா சென்டர்கள் வாயிலாகத் தான் ரஷ்யாவின் அனைத்து விதமான டிஜிட்டல் சேவையும் இயங்கி வரும் காரணத்தாலேயே இந்நிறுவனத்தை ரஷ்யாவின் கூகுள் என அழைக்கப்பட்டு வருகிறது.

உக்ரைனின் தாக்குதல் காரணமாக ரஷ்ய மக்கள் அனைவரும் 20-30 வருடம் பின்னோக்கி டிஜிட்டல் சேவைகள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக அந்நாட்டு மக்கள் புலம்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+