விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்யா அரசு உக்ரைன் மீது போர் தொடுத்த பின்பு உலக நாடுகளிடம் இருந்து அதிகளவிலான எதிர்ப்பை எதிர்கொண்டாலும், ரஷ்யாவின் ஆதிக்கத்தை உலக நாடுகளுக்குக் காட்டியுள்ளது என்றால் மிகையில்லை.
ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு இல்லாமல் ஒட்டுமொத்த ஐரோப்பாவும் முடங்கியுள்ளது, அதுமட்டுமா ரஷ்யா - உக்ரைன் நாடுகளின் உணவு பொருட்கள் இல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் அதிகப்படியான உணவு பணவீக்கத்தை எதிர்கொண்டு உள்ளது.
ஆனால் ரஷ்யாவுக்கு மிகப்பெரிய பாதிப்பு என்பதைத் தாண்டி தனக்கு வருமானம் ஈட்டும் அனைத்து துறையின் குடுமியும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் உள்ளது என்பது தான் தற்போது இருக்கும் முக்கியமான பிரச்சனை.
ரஷ்யா
ரஷ்யாவில் இருக்கும் 90 சதவீத தொழிற்சாலைகள், விவசாயத் துறை வர்த்தகம், எண்ணெய் வர்த்தகம் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனத்தின் மென்பொருளில் இயங்கி வருகிறது. ரஷ்யா எப்படித் தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வைத்து உலக நாடுகளை மிரட்டுகிறதோ...
பொருளாதார அடிப்படை
அதேவேளையில் ரஷ்யா பொருளாதாரத்திற்கு அடிப்படையே வெளிநாட்டு நிறுவனங்கள் கையில் உள்ளது. மேலும் ரஷ்யாவில் இருந்து அடுத்தடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறி வரும் வேளையில் ரஷ்யாவுக்கு இது பெரும் ஆபத்தாக விளங்கும். விளாடிமிர் புதின்-க்கு இப்போது இதுதான் பெரும் தலைவலியாக உள்ளது.
சிமென்ஸ் AG முதல் SMS குரூப்
உலக நாடுகளின் தடையின் காரணமாகத் தற்போது ரஷ்யாவில் இருந்து சிமென்ஸ் AG முதல் SMS குரூப் GMBH வரை பல தொழிற்துறை உற்பத்தியாளர்கள் வெளியேறி வரும் நிலையில், தத்தம் நிறுவனங்களின் மென்பொருள் சேவைகளும் தடை பெறுகிறது என்பது பெரும் அச்சத்தை ரஷ்யா பொருளாதார வல்லுனர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.
உற்பத்தித் துறைக்கான மென்பொருள்
ரஷ்யாவுக்குத் தற்போது CAD மற்றும் உற்பத்தித் துறைக்கான மென்பொருள் வாங்குவதில் தன் பெரும் பிரச்சனை, ஒருபக்கம் வெளிநாட்டு நிறுவனங்கள் உடன் வர்த்தக தடை மறுப்பும் இப்பிரிவில் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் இல்லை என ரஷ்ய வர்த்தகச் சந்தை ஆலோசகர் எலெனா செமனோவ்ஸ்கயா தெரிவித்துள்ளார்.
சீனா, இந்தியா
ஸ்டீல் உற்பத்தியில் இருந்து கச்சா எண்ணெய் உற்பத்தி வரை.. விவசாய துறை சேவைகள் முதல் மருத்துவச் சேவை வரை எனப் பல துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் சேவை தான் ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ரஷ்யாவுக்குச் சீனா, இந்தியா நிறுவனங்கள் மட்டுமே பெரிய அளவில் உதவும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications