பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது வெள்ளை மாளிகையின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டிரம்ப் நிர்வாகம் தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட F35 போர் விமானங்களை வாங்கும் படி மோடியிடம் கூறியதாக தெரிகிறது. அதேவேளையில் ரஷ்யாவை சேர்ந்த சுகோய் நிறுவனம் ஏற்கனவே தங்களின் SU -57 போர் விமானத்தை வாங்கும் படி இந்தியாவின் கோரிக்கை வைத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுமே தங்களிடம் இருக்கும் நவீன போர் விமானத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்வது தீவிரம் காட்டுகின்றன. இதில் இந்தியா எதை தேர்வு செய்யும் என்பது இனிவரும் நாட்களில் தான் தெரியவரும். இந்த இரண்டு விமானங்களுக்கும் இடையிலான ஒப்பீட்டை தற்போது பார்க்கலாம்.

அமெரிக்கா போர்விமானம்: அமெரிக்கா இந்தியாவிடம் விற்பனை செய்ய தயாராக இருக்கக்கூடிய F35 Lightning II போர் விமானம் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த விமானம் ஒற்றை எஞ்சினில் இயங்கக் கூடியது. இந்த விமானம் வானில் இருந்து வானில் இருக்கும் மற்றொரு இலக்கை தாக்குவது, வானத்திலிருந்து தரையில் இருக்கும் பொருளை தாக்குவது ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்
உளவு பார்ப்பதற்கும் இந்த விமானத்தை பயன்படுத்தலாம் .
இது F35A, F35B, F35C என மூன்று வகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 1931 கிலோமீட்டர் தூரம் (Mach 1.6) பயணிக்க கூடிய திறன் கொண்டது. ஓரிடத்திலிருந்து 1500 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய இலக்கையும் தாக்கும் திறன் கொண்டது. எதிர் நாட்டு அணியினரின் ரேடார் அமைப்புகளிடமிருந்து க்காமல் இது பயணிக்கும் திறன் கொண்டதாம். இந்த போர் விமானத்தின் விலை சுமார் 40 மில்லியன் டாலர்கள்
ரஷ்யாவின் Su-57E போர்விமானம்: ரஷ்யாவின் சுகோய் நிறுவனம் தயாரித்திருக்கும் Su-57E போர் விமானம். இது இரட்டை எஞ்சின்கள் கொண்டது, ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட விமானமாக இருக்கிறது. வானத்தில் இருந்து வானத்தில் இருக்கும் இலக்கையும், வானத்தில் இருந்து தரையில் இருக்கும் இலக்கையும் தாக்கும் திறன் கொண்டது.
ஒரு மணி நேரத்தில் 1350 கிலோமீட்டர் (Mach 1.8) வேகத்தில் செல்லும் திறன் கொண்டது
அதிநவீன தொழில்நுட்பங்களோடு அனைத்து வகையான காலநிலைகளிலும் பயன்படுத்தும் திறன் கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த போர் விமானத்தின் விலை 35 மில்லியன் டாலர்கள்.
இந்தியா என்ன முடிவெடிக்கும்?: இந்தியாவை பொறுத்தவரை பாதுகாப்பு உபகரணங்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்து செயல்படுகிறது. சொந்தமாக ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை வடிவமைத்து வருகிறது. எனவே வெளிநாட்டிலிருந்து தற்போதைக்கு விமானங்களை வாங்க அரசு முடிவெடுக்காது என சொல்லப்படுகிறது.
Written by: Devika
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications