ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான ரோஸ்நெப்ட்டும், இந்தியாவின் மிகச் சிறந்த எண்ணெய் சுத்திகரிப்பாளருமான இந்தியன் ஆயில் கார்ப் நிறுவனமும் எண்ணெய் சப்ளைக்காக ஒப்பந்தம் செய்துள்ளன.
Recommended Video
இதன் மூலம் இன்னும் குறிப்பிட்ட காலகட்டத்தில் இன்னும் இந்தியாவுக்கு அதிகளவில் எண்ணெய் கிடைக்கலாம்.
இவ்விரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் என்பது ரோஸ்நெப்ட்டின் தலைமை செயல் அதிகாரி இகோர் செச்சின், இந்திய பயணத்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
உறவு வலுப்படும்
ரோஸ்நெப்ட்டின் ஆயில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இகோர் செச்சின், தனது பயணத்தின் போது இந்தியாவினை சேர்ந்த முக்கிய அதிகாரிகளையும், முக்கிய தலைவர்களையும் சந்தித்து பேசினார்.
ரஷ்யா இந்தியா இடையேயான இந்த ஒப்பந்தம் மேற்கொண்டு இவ்விரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தலாம். இது இந்தியா ரூபாய் ரூபிள் பரிமாற்றத்தையும் விரைவில் அமலுக்கு கொண்டு வர வழிவகுக்கலாம்.
இந்திய முக்கிய வர்த்தக பங்காளி
இந்த ஒப்பந்தத்தின் மத்தியில் ரோஸ்நெப்ட் மற்றும் இந்திய கூட்டு நிறுவனங்களான ஷாகலின் 1 மற்றும் தாஸ் யுரியாக் மற்றும் வாங்கார்நெப்ட் இடையேயான கூட்டு திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எண்ணெய் இறக்குமதியின் அதிகரிப்பால், ரஷ்யா இந்தியாவின் முதல் 5 வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
இந்திய - ரஷ்யா நிறுவனங்கள் கூட்டணி
இந்திய நிறுவனங்கள் (ஓ என் ஜி சி விதேஷ் லிமிடெட், ஆயில் இந்தியா லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோசோர்சஸ்) 2016ம் ஆண்டு முதல் ரோஸ்நெப்ட்டின் துணை நிறுவனமான ஜே எஸ் சி வான்கார்நெப்டில் 49.9% உரிமையாளர்களாக உள்ளனர்.
மேற்கத்திய நாடுகள் என்ன?
ரஷ்யாவிடம் ஏற்கனவே தள்ளுபடி விலையில் அதிகளவிலான எண்ணெய் இறக்குமதி செய்வதாக, மேற்கத்திய நாடுகள் இந்தியாவின் மீது அதிருப்தியில் உள்ளன. இந்த நிலையில் இதுபோன்ற ஒப்பந்தம் என்பது மேற்கொண்டு இந்தியாவின் மீது மேற்கத்திய நாடுகள் கோபம் கொள்ள வழிவகுக்கலாம். எனினும் இந்தியா மிகப்பெரிய அளவிலான எண்ணெய் இறக்குமதியினை செய்து வரும் நாடாக உள்ளது. ஆக இதுபோன்ற ஒப்பந்தங்களையும், கிடைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வது இயல்பான ஒன்று தான் எனலாம்.


Click it and Unblock the Notifications