சர்வதேச முதலீட்டு சந்தையைத் தொடர்ந்து பதற்றத்திலேயே வைத்திருக்கும் ரஷ்யா - உக்ரைன் போர் பேச்சுவார்த்தைக்குப் பின்பும் தொடர்ந்து சரிவு பாதையிலேயே உள்ளது. குறிப்பாக ரஷ்ய பங்குச்சந்தையும், வெளிநாட்டுப் பங்குச்சந்தையில் இருக்கும் ரஷ்ய நிறுவனங்களும் அதிகப்படியான சரிவை எதிர்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் உலக நாடுகளும், வெளிநாட்டு நிறுவனங்களும் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்து வருகிறது. இதன் வாயிலாக ரஷ்ய நாட்டின் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு மிகவும் மோசமான சரிவை பதிவு செய்துள்ளது.
விளாடிமிர் புதின்
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் அறிவிப்பு வெளியிட்டது முதல் ரஷ்ய பங்குச்சந்தை மற்றும் ரஷ்ய நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் ரஷ்ய பணக்காரர்களின் சொத்து மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
83 பில்லியன் டாலர் சரிவு
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் இண்டெக்ஸ் படி 2022ஆம் ஆண்டில் மட்டும் ரஷ்யாவின் டாப் 500 பணக்காரர்களின் சொத்து மதிப்பு சுமார் 83 பில்லியன் டாலர் அளவுக்குச் சரிந்துள்ளது. இது ரஷ்ய வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகும்.
ரஷ்ய பங்குச்சந்தை
இன்று ரஷ்ய பங்குச்சந்தை சரிவு மிகவும் தீவிரமானதாக இருந்த காரணக்தால் ரஷ்யாவின் மத்திய வங்கி திங்களன்று வர்த்தகத்தை நிறுத்தியது, இதன் மூலம் பெரிய அளவிலான சரிவுகள் ஈடுசெய்யப்பட்டு உள்ளது.
50 சதவீத சரிவு
லண்டனில் பட்டியலிடப்பட்ட ரஷ்ய நிறுவனங்களின் பங்குகள், எரிவாயு உற்பத்தியாளர் நோவடெக் முதல் எஃகு தயாரிப்பாளர் செவர்ஸ்டல் வரை, திங்களன்று அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகள் பொருளாதாரத் தடைகள் காரணமாக 50 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிவை பதிவு செய்தது.
ரஷ்ய பில்லியனர்கள்
ஏற்கனவே உலக நாடுகள் பல ரஷ்ய பில்லியனர்கள் மீது தடை விதித்துள்ள நிலையில் இன்று ஐரோப்பிய யூனியன் உலோகத் தொழிலதிபர் அலிஷர் உஸ்மானோவ், ஆல்ஃபா குழுமத்தின் உரிமையாளர்கள் மிகைல் ஃப்ரிட்மேன் மற்றும் பீட்ர் அவென் மற்றும் ஸ்டீல் துறை தொழிலதிபரான அலெக்ஸி மொர்டாஷோவ் மீது தடை விதிக்கப்பட்டு உள்ளது.
1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்
இந்தப் போர் மூலம் ரஷ்யாவின் 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரம் சரிந்து வரும் வேளையில், நடந்துள்ள ஓரே நல்ல விஷயம், பல வருடங்களாக ரஷ்யா இந்தப் போருக்கு தயாராகி வரும் நிலையில் சுமார் 640 பில்லியன் டாலரை ரஷ்ய மத்திய வங்கி மட்டுமே வைத்துள்ளது தான்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications