சவுதிக்கே சவால் விடுக்கும் ரஷ்யா..நாங்களும் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.. விலையை குறைக்க முடியும்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஷ்யாவின் கடுமையான எதிர்ப்புக்கு பின்னர், கச்சா எண்ணெய் உற்பத்தியாளார்களான சவுதி அரேபியாவும் ஒர் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டது.

இதனால் நிலைகுலைந்து போன உற்பத்தியாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர்.

சரி அப்படி என்னதான் நடந்தது, எதற்காக சவுதி இப்படி ஒரு முடிவை எடுத்தது. பலத்த வீழ்ச்சி கண்ட மறு நாளே மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது ஏன்? ஏன் இவ்வளவு அதிகரித்துள்ளது. வாருங்கள் பார்க்கலாம்.

தேவை குறைவு

தேவை குறைவு

சர்வதேச அளவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே கச்சா எண்ணெய் பயன்பாடானது குறைந்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே போதுமான அளவுக்கு குறைந்திருந்தது. இந்த நிலையில் உலகளவில் தேவை குறைந்து வருகிறது. இதனால் உற்பத்தியை குறைக்கலாம் என ஒபெக் நாடுகள் கூறியது.

ரஷ்யா கைவிரிப்பு

ரஷ்யா கைவிரிப்பு

மேலும் உற்பத்தியை குறைத்தால் தான் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியும் என்றும் ஓபெக் நாடுகள் கூறின. குறிப்பாக சொல்லவேண்டுமானால் மார்ச் மாதம் வரையில் 2.2 மில்லியன் பேரல் உற்பத்தியை குறைத்த நிலையில், மேலும் தற்போது கூடுதலாக 1.5 மில்லியன் பேரல்களை குறைக்க திட்டமிடுகையில், ரஷ்யா அதற்கு முடியாது என திட்டவட்டமாக கைவிரித்துள்ளது.

ரஷ்யாவுக்கு பதிலடி

ரஷ்யாவுக்கு பதிலடி

ரஷ்யாவின் இந்த எதிர்பார்ப்பால் கொதித்தெழுந்த சவுதி அரேபியா, ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இப்படி ஒரு பகீர் அறிவிப்பை வெளியிட்டது. இதனால் கச்சா எண்ணெய் விலையானது 1991ல் இருந்து ஒரு நாள் வீழ்ச்சியில் இது தான் அதிகம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த நிலைமை அப்படியே வேறுவிதமாக மாறிவிட்டது.

கச்சா எண்ணெய் விலை ஏற்றம்

கச்சா எண்ணெய் விலை ஏற்றம்

சவுதி அரேபியா கூறினால் என்ன, ரஷ்யா என்ன சொன்னால் என்ன நான் என்பாட்டுக்கு என் வேலையை செய்கிறேன் என்பது போல கச்சா எண்ணெய் விலை இன்று ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. குறிப்பாக WTI கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 5.72% ஏற்றம் கண்டு, 32.90 டாலர்களாக வர்த்தகம் ஆகிவருகிறது. இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5.03% அதிகரித்து 36.09 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.

பங்குகளும் வீழ்ச்சி

பங்குகளும் வீழ்ச்சி

இதனால் எண்ணெய் நிறுவனங்களின் பங்கு விலைகளும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. இதனால் உற்பத்தியாளர்கள் விலையை சரிவைக் ஈடுகட்ட செலவினை குறைக்க தொடங்கியுள்ளனர். இதனால் எக்ஸான் பங்குகள் 12% அதிகமாக வீழ்ச்சி கண்டன. இது கடந்த அக்டோபர் 15, 2008 முதல் இது மிகப்பெரிய ஒரு நாள் இழப்பாகும்.

உற்பத்தியை உயர்த்த திட்டம்

உற்பத்தியை உயர்த்த திட்டம்

இதே போல் செவ்ரானின் பங்குகள் 15% வீழ்ச்சி கண்டுள்ளது. இது 1987ம் ஆண்டு முதல் ஒப்பிடும்போது இது மிகப்பெரிய வீழ்ச்சியாக கருதப்படுகிறது. இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் இருந்து சவுதி அரேபியா தனது உற்பத்தியை ஒரு நாளைக்கு 10 பில்லியன் பேரல்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது விலையை குறைக்க வழிவகுத்தது.

தன்னாலும் உற்பத்தியை குறைக்க முடியும்

தன்னாலும் உற்பத்தியை குறைக்க முடியும்

ஆனால் சவுதியின் இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா சவுதி அரேபியாவினை போல தானும் ஒரு சிறந்த எண்ணெய் உற்பத்தியாளர் தான் என்று ரஷ்யா கூறியுள்ளது. மேலும் தனக்கும் உற்பத்தியை உயர்த்த முடியும் என்றும், ஆறு முதல் 10 ஆண்டுகள் வரையிலான விலை குறைப்பினை சமாளிக்க முடியும் என்றும் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russia said could lift output and that it could cope with low oil prices

according to the sources, Russia one of the world's top producers alongside Saudi Arabia and the United States, so Russia also could lift output and that it could cope with low oil prices for six to 10 years.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X