கைவிரித்த ரஷ்யா.. இந்தியாவுக்கு புது சிக்கல்.. ஈரான் போர் நேரத்தில் இப்படியா நடக்கணும்!

ஈரான் போர் துவங்கிய பின்பு வளைகுடா நாடுகளில் இருந்து வெளியேறும் கச்சா எண்ணெய் அளவு பெரிய அளவில் குறைந்துள்ள நிலையில், உலகில் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து தான் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.

அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதித்த கட்டுப்பாடுகள், தடைகள் காரணமாக ரஷ்யா தனது கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வந்தது.

கைவிரித்த ரஷ்யா.. இந்தியாவுக்கு புது சிக்கல்.. ஈரான் போர் நேரத்தில் இப்படியா நடக்கணும்!

இந்த நிலையில் ஹார்முஸ் நீரிணை மற்றும் பாப் அல் மண்டெப் நிரீணை ஆகிய இரண்டிலும் தற்போது போர் மூடு வர்த்தகம் முடங்கியுள்ள காரணத்தால் ஆசியாவுக்கு மொத்த சப்ளையராக இருக்கிறது ரஷ்யா. இதை பணமாக்கும் முயற்சியில் ரஷ்ய கச்சா எண்ணெய் வர்த்தகர்கள், இதுநாள் வரையில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த டிஸ்கவுண்ட்டை ரத்து செய்துள்ளனர் என பாரத் பெட்ரோலியம் கார்ப் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஈரான் போர் வெடித்த பின்பு அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது, இதன் வாயிலாக இந்தியன் ஆயில் அதிகளவில் ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்கி வந்தது. ஆகஸ்ட் மாதம் வரையிலான டெலிவரிக்கு ஏற்கனவே பழைய தள்ளுபடி விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கப்பட்டாலும், செப்டம்பர் மாதத்திற்கான டெலிவரிக்கு பேசப்படும் போது, தள்ளுபடியை ரத்து செய்துள்ளது.

ஈரான் போர் காரணமாக ரஷ்யா மட்டுமில்லை, உலகில் எந்த நாடும் தள்ளுபடி அளிக்க முன்வரவில்லை, ரஷ்யா இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திற்கும் பிரெண்ட் கச்சா எண்ணெய் காட்டிலும் ஒரு பேரலுக்கு 10 டாலர் வரையிலான தள்ளுபடியில் விற்று வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தள்ளுபடி ரத்து செய்யப்படும் காரணத்தால் பிரெண்ட் கச்சா எண்ணெய்க்கு இணையான விலையில் வாங்க வேண்டும்.

அடுத்த இந்தியாவில் என்ன நடக்கும்...?

இந்தியா வாங்கும் ரஷ்யா எண்ணெய்க்கான தள்ளுபடி குறைந்தால், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களிண் லாபம் பெரிய அளவில் குறையும், இதனால் Buffer அளவு குறைந்து எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்.

அமெரிக்கா - ஈரான் மத்தியில் 13வது நாளாக தாக்குதல் நடந்து வருகிறது. அமெரிக்க ராணுவம் தொடர்ந்து இரவு நேரத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்தி பெரும் பாதிப்பை ஈரான் உள்ளகட்டமைப்பு மீது செய்து வருகிறது.

இதற்கான பதிலடியை ஈரான் வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் குறிப்பாக குவைத், ஜோர்டன் நாடுகளில் அதிகளவிலான தாக்குதல்களை ஈரான் நடத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+