இந்தியா, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்து வருவதாக, ஏற்கனவே மேற்கத்திய நாடுகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு உக்ரைன் வெளியுறவுத் துறை, இந்தியா ரஷ்யாவின் எண்ணெய்-ஐ வாங்கவில்லை, உக்ரேனியர்களின் ரத்ததினை வாங்குவதாக அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில், இந்தியாவிடம் இருந்து ரஷ்யா பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கிறது.
ரஷ்யாவின் எதிர்பார்ப்பு
ஏற்கனவே சில்லறை பொருட்கள் பலவற்றிற்கும் இந்திய ஏற்றுமதியாளர்களை அணுகிய நிலையில், தற்போது இன்னும் பல பொருட்களுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக மருத்துவ சாதனங்கள், மருந்துகள், கெமிக்கல்ஸ், தொழிற்துறை உபகரணங்கள், கார்மெண்ட்ஸ், பர்னிச்சர் மற்றும் ஜூவல்லரிகள் உள்ளிட்ட பலவற்றையும் ரஷ்யாவுக்கு இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பணம் செலுத்தும் முறை
இந்தியாவும், ரஷ்யாவும் பணம் செலுத்தும் வழிமுறைகள் குறித்து ஏற்கனவே விவாதித்து வரும் நிலையில், இது குறித்து மேலும் விவாதித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது சரிசெய்யப்படும் பட்சத்தில் இவ்விரு நாடுகளுக்கு இடையேயான வணிகம், மேலும் விரிவாக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் கோரிக்கை
ரஷ்யாவின் சமீபத்திய அறிக்கையின் படி, மொத்தம் 71 கோரிக்கைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கோரிக்கைகள் இறக்குமதி சார்ந்ததாகும். இதில் சில சாத்தியமான ஏற்றுமதி வாய்ப்புககளும் உள்ளன.
இதில் மெஷினரி, பேப்பர், டெக்டைல்ஸ், மோட்டார் உதிரி பாகங்கள், மருத்துவ பொருட்கள், தோல் என பலவும் இந்த பட்டியலில் அடங்கும்.
இறக்குமதியும் அதிகம்
கடந்த ஏப்ரல் - ஜூன் 2022 காலகட்டத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 369.29% அதிகரித்து, 9.26 பில்லியன் டாலர் மதிப்பில் அதிகரித்துள்ளது. எனினும் ஏற்றுமதியானது 37.82% குறைந்து, 435.62 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியானது கணிசமாக அதிகரித்துள்ளது. அதுவும் மேற்கத்திய நாடுகளின் தடைக்கு மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் ஏற்றுமதி
ரஷ்யா எண்ணெய் ஏற்றுமதியினை அதிகரிக்க தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவின் இறக்குமதி சுமார் 7.9 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிபொருளை இறக்குமதி செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 800% அதிகமாகும்.
நல்ல வாய்ப்பு
இறக்குமதி அதிகரித்துள்ள அதேசமயம் ஏற்றுமதியும் விரைவில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் ரஷ்யாவின் இந்த எதிர்பார்ப்பானது, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்க போகும் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!



Click it and Unblock the Notifications