உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. இருப்பினும் ரஷ்யா பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது.
இதற்கு இந்தியாவிற்கு அதிகளவில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ததும், இந்திய நிறுவனங்கள் வழியே மேற்கத்திய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் அனுப்பி வைத்ததும் காரணம் என தெரிய வந்துள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போர்: ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அவ்வப்போது பொருளாதாரம் மற்றும் வர்த்தக நெருக்கடிகளை கொடுப்பது வழக்கம் தான். ஆனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து ரஷ்யா மற்றும் அந்நாட்டு நிறுவனங்கள் மீது மிக கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன.
இதனால் ரஷ்யா பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து, உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும் என கருதின. அதே போல ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதையும் நிறுத்துவதாக மேற்கத்திய நாடுகள் அறிவித்தன.
தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விற்ற ரஷ்யா: மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடையை அடுத்து ரஷ்யா தள்ளுபடி விலையில் சீனா மற்றும் இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை விற்பனை செய்தது. இரண்டு நாடுகளுமே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கி கொண்டன.
இதனால் 2023ஆம் ஆண்டில் ரஷ்யா அரசின் வருவாய் 320 பில்லியன் டாலர்கள் என உயர்ந்துள்ளது. இதற்கு இந்தியாவிடம் இருந்து கிடைத்த வருவாயும் இந்தியா வழியே நிகழ்ந்த கச்சா எண்ணெய் உற்பத்தியும் காரணம் என எரிசக்தி மற்றும் தூய்மை காற்றுக்கான ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவிற்கு 35% கச்சா ஏற்றுமதி: கடந்த ஆண்டு இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து 37 பில்லியன் டாலர்களுக்கு கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. உக்ரைனுடனான போருக்கு முன்பிருந்த அளவை விட 13 மடங்கு அதிகம் இது.
2023இல் ரஷ்யா உற்பத்தி செய்த மொத்த கச்சா எண்ணெயும் இந்தியா மற்றும் சீனாவிற்கே விற்பனை செய்துள்ளது.ரஷ்யா உற்பத்தி செய்த கச்சா எண்ணெயில் 35% இந்தியாவுக்கு அனுப்பியதாக எஸ் & பி குளோபல் அறிக்கை தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய், சுத்திகரிப்பில் இந்தியா முன்னணி வகித்து வருகிறது. அதே போல ரஷ்யாவின் எண்ணெயை சுத்திகரித்து மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்புவதிலும் இந்தியாவின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் இந்தியா 2022 டிசம்பர் முதல் 2023 டிசம்பர் வரை 1.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள் எண்ணெயை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது.
அதே போல தடை விதித்த நாடுகளும் மறைமுகமாக 9.1 பில்லியன் டாலர்கள் கச்சா எண்ணெயை இந்தியா வழியே வாங்கியுள்ளன. இது முன்பிருந்த அளவை விட 44% அதிகம்.
இதனால் ரஷ்யா பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. 2022இல் ரஷ்யாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி 2% மற்றும் ஏற்றுமதி 7% உயர்ந்துள்ளது. ரஷ்யாவின் பெட்ரோலியம் வருவாய் 28% அதிகரித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications