டெல்லி: இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வருகை தந்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக வரவேற்று விருந்தளித்தார் . இன்றைய தினம் இந்திய ரஷ்யா இடையிலான 23வது உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் இருநாட்டு அதிகாரிகளும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டது . பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு, வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதனை அடுத்து இருநாட்டு தலைவர்கள் முன்னிலையிலும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் புதினும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதத்தை எதிர்க்க உலகளாவிய ஒற்றுமை தேவை என கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் தோளோடு தோல் நின்று வருகின்றன என கூறினார். புதின் திறமையுடன் செயல்படக்கூடிய தலைவர், உக்ரைன் நெருக்கடி தொடங்கியதில் இருந்து நாங்கள் தொடர்ந்து விவாதித்து வருகிறோம், ஒரு உண்மையான நண்பராக அவர் எல்லாவற்றையும் அவ்வப்போது எங்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார் என கூறினார்.
பிரதமர் மோடி அமைதியில்தான் நாடுகளின் நலன் அடங்கியிருக்கிறது, இந்தியாவும் ரஷ்யாவும் ஒன்றாக உலகை அமைதி பாதையை நோக்கி வழிநடத்துவோம் என அப்போது அவர் தெரிவித்தார். இதனை அடுத்து பேசிய ரஷ்ய அதிபர் புதின் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ரஷ்யா எப்போதும் தன்னுடைய ஆதரவை வழங்கும் என திட்டவட்டமாக தெரிவித்தார் . இந்தியாவிற்கு எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய ரஷ்யா தயாராக இருக்கிறது என தெரிவித்தார்.

இந்த உச்சி மாநாட்டில் ரஷ்யாவில் இந்திய நிறுவனங்கள் யூரியா ஆலை அமைப்பது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது . இந்திய எஃப்எஸ்எஸ்ஏஐ மற்றும் ரஷ்யாவின் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பிற்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ அறிவியல் மற்றும் சுகாதார துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
மேலும் கடல் சார்ந்த வர்த்தக போக்குவரத்துகளை மேம்படுத்துவது தொடர்பாக தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன . இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் ஒத்துழைப்பை 2030-ம் ஆண்டு வரை நீட்டிப்பது தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. எரிசக்தி துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக செட்டில்மெண்டுகளை இருநாட்டு கரன்சிகளிலேயே மேற்கொள்வது என்பன உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக புதின் அறிவித்தார்.
இந்தியா - ரஷ்யா வர்த்தக மதிப்பு தொடர்ந்து வளரச்சி அடைந்து வருவதாகவும் ஓராண்டுக்கான இருநாட்டு வர்த்தக மதிப்பை 100 பில்லியன் டாலராக உயர்த்துவது என திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார் . இந்தியாவின் மிகப்பெரிய அணுசக்தியின் நிலையத்தை கூடங்குளத்தில் கட்டமைத்து வருவதை புதின் சுட்டிக்காட்டினார். இதற்கிடையே ரஷ்யர்கள் இந்தியாவிற்கு இலவசமாக 30 நாட்கள் இ டூரிஸ்ட் விசாவில் வருகை தரலாம் என்று அறிவிப்பை மோடி வெளியிட்டார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications