ரஷ்யாவுக்கு விழுந்த அடி.. இந்தியாவை பதம் பார்க்கிறது.. கதறும் சூரத் மக்கள்..!!

ரஷ்யா-உக்ரைன் போரின் தாக்கங்கள் போர்க்களத்தைத் தாண்டி, உலகெங்கிலும் உள்ள தொழில்களை பாதித்து வருகின்றன. இத்தகைய முக்கியமான பாதிப்புகளில் ஒன்று, இந்தியாவின் முக்கிய வர்த்தக துறையாக இருக்கும் சூரத் வைரத் தொழில். சூரத் நகரில் மட்டும் சுமார் 4000 வைரம் பாலிஷ் செய்யும் தொழிற்சாலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளால் சூரத்தின் வைர தொழிலில் ஈடுபட்டு இருக்கும் கைவினை கலைஞர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். உலகின் மிகப்பெரிய வைர உற்பத்தியாளரான ரஷ்யாவின் வைர சப்ளை மேற்கத்திய நாடுகளின் தடையின் காரணமாக முடங்கியதால், சூரத்தின் வைர தொழிற்சாலைகளுக்கு வைரம் கிடைப்பது குறைந்துள்ளது.

ரஷ்யாவுக்கு விழுந்த அடி.. இந்தியாவை பதம் பார்க்கிறது.. கதறும் சூரத் மக்கள்..!!

இதன் விளைவாக, சூரத் வைர தொழிலில் மந்தநிலைக்குள் தள்ளப்பட்டு உள்ளது. இது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய வேலையை இழந்து, நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு முக்கியமான காரணம் இந்தியாவில் பாலிஷ் செய்யப்பட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வைரத்தில் பெரும் பங்கீட்டை ரஷ்ய வைரங்கள் ஆட்கொண்டு உள்ளது.

ரஷ்யாவின் பாலிஷ் செய்யப்படாத வைரம் தரத்தில் சிறப்பாக இருக்கும் அதேவேளையில், விலையிலும் சற்று மலிவானது. இதனால் சூரத் வைர வியாபாரிகள் அதிகளவில் ரஷ்ய வைரங்களை வாங்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து அதிகம் லாபம் பார்த்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய வைரங்களுக்கு ஏற்பட்ட தடையின் காரணமாகப் பிற நாடுகளில் இருந்து விலை உயர்ந்த வைரத்தை வாங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால் லாபம் குறைந்து, வர்த்தகமும் பாதிப்படைந்துள்ளது.

வைரத் தொழிலாளர்கள் சங்கம், கடந்த 16 மாதங்களில் குறைந்தது 65 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளது. இவர்கள் ஒரு மாதத்திற்குச் சராசரியாக ரூ. 25,000-30,000 சம்பாதித்து வந்துள்ளனர். தற்போது வைர தொழில் முடங்கியதால் மாற்று வேலைவாய்ப்புகளைத் தேடிக்கொள்ள முடியாமல் போனதால் இத்தகைய தவறான முடிவை எடுத்துள்ளனர்.

இந்திய அரசு, உலகின் மிகப்பெரிய வைர உற்பத்தியாளரான ரஷ்யாவிலிருந்து பாலிஷ் செய்யப்படாத, வெட்டப்படாத வைர இறக்குமதிகள் மீதான மேற்கத்திய தடையை மூலம் இந்தியா எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து உலக அரங்கில் கவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வைரத்தில் சுமார் 98 சதவீதம் சூரத்தில் இருந்து நடைப்பெறுகிறது. இந்த ஆண்டு, ஜி7 நாடுகள், ரஷ்யாவில் வெட்டப்பட்ட, பிராசஸ் செய்யப்பட்ட வைரங்களுக்கு தடை விதித்தது தான் சூரத்-ன் இந்த மோசமான நிலைக்கு முக்கியமான காரணமாக உள்ளது.

மார்ச் மாதம் முதல், ஜி7 தடை மூன்றாம் நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ரஷ்யா வைரங்களுக்கும் இந்த தடை விரிவுபடுத்தப்பட்டுள்ளது, இது சூரத் வைரம் பாலிஷ் தொழிலை மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. அமெரிக்கா தான் இந்தியாவில் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களுக்கான மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான சந்தையாக உள்ளது.

இந்த சூழ்நிலையில் கோபல் டிரேட் ரீசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) வெளியிட்டுள்ள தகவல்கள் சூரத் வைர தொழிலின் பாதிப்பைப் படம் போட்டுக் காட்டி வருகிறது. இந்தியாவுக்கு ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வைரங்களின் மதிப்பு 2021-22 இல் 18.5 பில்லியன் டாலராக இருந்தது ஆனால் 2023-24 இல் 14 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+