ரஷ்யா உக்ரைன் மத்தியிலான போர் அறிவிப்பு வெளியானதில் இருந்து முதலீட்டு சந்தைகள் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. பங்குச்சந்தையை தாண்டி கிரிப்டோ முதலீட்டு சந்தையும் அதிகப்படியான சரிவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் உக்ரைன் மீதான போர் அறிவிப்புக்கு பின்பு கிரிப்டோ சந்தையில் இருந்து சுமார் 200 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டு தொகை வெளியேறியுள்ளது இதன் மூலம் ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தையும் 10 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவை பதிவு செய்துள்ளது.
ரஷ்ய - உக்ரைன் போர்
ரஷ்ய அதிபர் உக்ரைன் மீதான போர் அறிவிப்புக்கு பின்பு பங்குச்சந்தைக்கு இணையாக கிரிப்டோ சந்தையும் அதிகப்படியான சரிவை எதிர்கொண்டது. பல முன்னணி கிரிப்டோகரன்சிகள் இரட்டை இலக்கு அளவில் சரிவை பதிவு செய்து உள்ளது.
அதிகப்படியான சரிவு
உக்ரைன் மீதான போர் அறிவிப்புக்கு பின்பு எதிரியம், கார்டானோ, அவலான்சி, போல்காடாட் ஆகியவை அதிகளவிலான சரிவை எதிர்கொண்டது. ஆனால் மீம்காயின்களான டோஜ்காயின் மற்றும் ஷிபா இனு மிகவும் மோசமான சரிவை பதிவு செய்துள்ளது.
பிட்காயின், டெதர் மட்டுமே குறைவான சரிவை பதிவு செய்துள்ளது.
டிஜிட்டல் கோல்டு
2022ஆம் ஆண்டின் முதல் நாளில் இருந்து சரிந்து வரும் கிரிப்டோகரன்சி சந்தை, இந்த உக்ரைன் - ரஷ்யா போர் மூலம் கடுமையான சரிவை எதிர்கொண்டு உள்ளது. இதனால் டிஜிட்டல் கோல்டு என்னும் பெயரை கிரிப்டோ சந்தை இழந்துள்ளது.
கிரிப்டோகரன்சி விலை
இன்று மாலை வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி விலை நிலவரம்
பிட்காயின் - $38,864.03 டாலர்
எதிரியம் - $2,672.21 டாலர்
டெதர் - $1.00 டாலர்
பினான்ஸ் - $363.92 டாலர்
USD காயின் - $1.00 டாலர்
ரிப்பிள் - $0.71 டாலர்
கார்டானோ - $0.86 டாலர்
சோலானோ - $89.85 டாலர்
டெரா - $66.63 டாலர்
அவலான்சி - $75.77 டாலர்
பினான்ஸ் USD - $1.00 டாலர்
டோஜ்காயின் - $0.12 டாலர்
போல்காடாட் - $16.21 டாலர்
ஷிபா இனு - $0.0000241 டாலர்
டெரா USD - $1.00 டாலர்
7 நாள் சரிவு
கடந்த 7 நாட்களில் பிட்காயின் - 3.90% சரிவு, எதிரியம் - 7.88% சரிவு, டெதர் - 0.02% சரிவு, பினான்ஸ் - 10.35% சரிவு, USD காயின் - 0.02% சரிவு, ரிப்பிள் - 9.57% சரிவு, கார்டானோ - 15.87% சரிவு, சோலானோ - 4.91% சரிவு, டெரா - 30.09% சரிவு, அவலான்சி - 13.38% சரிவு, பினான்ஸ் USD - 0.11% சரிவு, டோஜ்காயின் - 12.07% சரிவு, போல்காடாட் - 11.38% சரிவு, ஷிபா இனு - 17.28% சரிவு, டெரா USD - 0.28% சரிவு.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications