ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனையானது நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது.
இதற்கிடையில் ரஷ்யா மீது பல நாடுகளும் பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. சில நிறுவனங்கள் ரஷ்ய நிறுவனங்கள் உடனான வணிகத்தினையும் முறித்துக் கொண்டுள்ளன.
இதற்கிடையில் ரஷ்யா - உக்ரைன் போர் இன்னும் முடிவடையாமல் தொடர்வதால், ஏற்றுமதியாளர்கள் ரஷ்யா மற்றும் காமன் வெல்த் நாடுகளுக்கு தங்களது சரக்குகளை அனுப்ப மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் வணிகமா?
இதற்கிடையில் பல நிறுவனங்கள் இப்போது ரஷ்யாவில் தங்களது வணிகங்களை மறுபரிசீலனை செய்து வருகின்றன. மேலும் சில நிறுவனங்கள் தங்களது வணிகங்களை கட்டுப்படுத்தியுள்ளன. சில அண்டை நாட்டு நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்தியும் வருகின்றன. சில நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ளன.
3 வழிகள்
ரஷ்யா, காமன் வெல்த் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 3 வழிகளை மாற்றாக ஆராய்ந்து வரும் ஏற்றுமதியாளர்கள், முதலாவதாக சீனா வழியாக கிங்டாவோ துறைமுகத்தையும், இரண்டாவது சர்வதேச வடக்கு - தெற்கு போக்குவரத்து (INSTC) வழியாக ஈரான் மற்றும் அஜர்பைஜான் வழியாக மும்பையில் இருந்து மாஸ்கோவை இணைக்கிறது. மூன்றாவது ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க்கில் இருந்து, ஜார்ஜியாவில் உள்ள போட்டி துறைமுகத்திற்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கான மற்றொரு வழியாக ஆராயப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதற்காக மாற்று வழி?
தற்போது உலகளாவிய கப்பல் நிறுவனங்கள் கருங்கடல் வழியாக ரஷ்யாவுக்கு சரக்குகளை கொண்டு செல்லவில்லை. மேலும் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இயல்பு நிலை ஏற்பட்டாலும் கூட, உடனடியாக அந்த வழியினை பயன்படுத்த முடியாது. ஆக இந்தியாவில் இருந்து மாற்று வழியினை ஆராய்வதற்கு இதுவும் ஒரு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
CIS நாடுகள் எது?
CIS நாடுகளில் அஜர்பைனான், ஆர்மீனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.
ஏற்றுமதியாளர்கள் பெரும்பாலும் INSTC வழியினையே பயன்படுத்த விரும்புகின்றனர். ஏனெனில் இந்த பன்னாட்டு வர்த்தக வழித்தடம் இந்தியாவால் உருவாக்கப்பட்டது. இது தவிர ஏற்றுமதியாளர்களும் ஹம்பர்க் மூலம் பொருட்களை அனுப்ப தயாராக உள்ளனர்.
சீனா வழியாக வேண்டாம்?
சீனா வழியாக பொருட்களை அனுப்புவதற்கான விருப்பம் இருந்தாலும், இதில் அதிக போக்குவரத்து நிலவி வருகின்றது. மேலும் இந்த பகுதியில் சீனாவின் சரக்கு கப்பல்களுக்கே முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது. அதோடு இது அதிக நேரம் எடுக்கும் ஒரு பாதையாகவும் பார்க்கப்படுகிறது. ஆக INSTC என்பது நேரம் குறைவான, அதே சமயம் செலவு குறைவான ஒரு பாதையாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications