ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான தாக்குதல் தொடர்ந்து நீடித்து வரும் வேளையில், உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா ரஷ்யாவின் போருக்கு உதவும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை கட்டம் கட்டி அடிக்க துவங்கியுள்ளது.
ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீதான தாக்குதலை கட்டுப்படுத்தும் முயற்சியாக, அமெரிக்கா பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது புதிதாக தடைகளை விதித்துள்ளது. இதில் நான்கு இந்திய நிறுவனங்களும் அடங்கும். இந்த நடவடிக்கை புதியதல்ல, ஆனால் ரஷ்யாவுக்குக்கு உதவும் மூன்றாம் தரப்பு நாடுகளை ஈடுப்பாட்டை தடுக்க அமெரிக்காவின் எடுக்கும் முக்கியமான முயற்சியாக இதை பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா வெளியுறவுத் துறை 120க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தடனை விதித்துள்ளது, அதே நேரத்தில் நிதித் துறை 270க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளது. கூடுதலாக, அமெரிக்காவின் வணிகத் துறை 40 நிறுவனங்களை அதன் தடை பட்டியலில் சேர்த்துள்ளது.
இதன் மூலம் அமெரிக்க அரசு சுமார் 430 நிறுவனங்களையும், தனிநபர்களையும் தனது தடை பட்டியலில் நேற்று சேர்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 4 இந்திய நிறுவனங்கள் மீது தடை விதித்திருப்பது கூடுதல் அதிர்ச்சியான விஷயமாகும்.
அமெரிக்கா தடை விதிக்கப்பட்ட இந்திய நிறுவனங்கள் பட்டியலில் அசெண்ட் ஏவியேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் மாஸ்க் டிரான்ஸ் ஆகியவை உள்ளது. இந்த நிறுவனங்கள் ரஷ்ய நிறுவனங்களுக்கு அமெரிக்க தயாரிப்பு விமான பாகங்களை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது, இதன் மூலம் ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு உதவியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
TSMD Global Private Limited என்ற மற்றொரு இந்திய நிறுவனம், அமெரிக்க தடை பட்டியலில் உள்ள நிறுவனங்கள் உட்பட ரஷ்ய நிறுவனங்களுக்கு மின்னணு உதிரிபாகங்களை வழங்கியதாக இதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உதிரிபாகங்கள் பாதுகாப்பு மற்றும் விண்வெளி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் முக்கிய பயன்பாடுகளைக் கொண்டுள்ளன.
ரஷ்யாவின் தாக்குதலை எளிதாக்கும், உதவி செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை தொடரும் என்று அமெரிக்க அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
அசென்ட் ஏவியேஷன் இந்தியா, மாஸ்க் டிரான்ஸ், டிஎஸ்எம்டி குளோபல் மற்றும் ஃபுட்ரேவோ ஆகிய 120 நிறுவனங்களின் பட்டியலில் நான்கு இந்திய நிறுவனங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் அமெரிக்க வெளியுறவுத்துறை விவரித்துள்ளது.
டெல்லியை தளமாகக் கொண்ட அசென்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் இயக்குநர்களான விவேக் குமார் மிஸ்ரா மற்றும் சுதிர் குமார் ஆகிய இரு இந்தியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் சுமார் 19 இந்தியர்களும், இந்திய நிறுவனங்களும் தடை செய்யப்பட்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications