விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்ய அரசின் ராணுவத்திற்கும், ரஷ்ய ஆதரவில் வாக்னர் (wagner) என்ற பாதுகாப்பை படை குழு தற்போது மோதல் உருவாகியுள்ளது. wagner படை என்பது அரசு கட்டுப்பாட்டில் இயங்காத அதேவேளையில் அரசின் உதவிகள் உடன் இயங்கும் ஒகு தனியார் ராணுவ படை.
உக்ரைன் போரில் wagner படை விளாடிமிர் புடின் நேரடி உத்தரவின் பெயரில் பல அதிரடி தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த முக்கியமான படை விளாடிமிர் புடினின் நெருங்கிய தோழரான Yevgeny Prigozhin கீழ் செயல்பட்டு வந்தது. இந்த wagner படை ரஷ்ய வீதிகளை மீறி, ரஷ்ய ராணுவம் செல்ல முடியாத இடத்திற்கு கூட சென்று தாக்கும் பலம் வாய்ந்து.

இந்த wagner படையில் தற்போது 25000 பேர் இருப்பதாக கூறப்படும் நிலையில் இப்படையின் தலைவர் Yevgeny Prigozhin ரஷ்ய ராணுவத்தை தாக்க தயாராகியிருப்பது மட்டும் அல்லாமல் ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் வரும் அளவுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளது. உலகில் பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அரசு உள்நாட்டு போர், உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள், உள்நாட்டு அரசியல் பிரச்சனைகளால் மட்டுமே வீழ்ந்துள்ளது. தற்போது ரஷ்யாவிலும் உருவாகியுள்ளது.
உக்ரைன் நாட்டிற்குள் 2022 பிப்ரவரி மாதம் ரஷ்ய ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியது, இன்று வரையில் போர் இரு நாடுகளுக்கும் போர் நடந்து வருகிறது. 2022 ஆம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் மத்தியில் போர் வெடித்த போது ஐரோப்பா, பிரிட்டன் நாட்டு சந்தைகள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. இதன் மூலம் இந்திய சந்தையும் கடுமையாக பாதிக்கப்பட்டது மறக்க முடியாது.
இந்த நிலையில் தற்போது ரஷ்யாவில் உள்நாட்டு ரஷ்ய ராணுவத்திற்கும், தனியார் ராணுவமாக இயங்கும் wagner படை-க்கும் மோதல் வெடித்துள்ளது. இதன் மூலம் ரஷ்யாவை சாந்துள்ள இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே ஐரோப்பா, பிரிட்டன் பொருளாதாரம் மந்தமாக இருக்கும் வேளையில் ரஷ்ய உள்நாட்டு போர் பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாது என கணிக்கப்படுகிறது.
இதேவேளையில் இந்திய பங்குச்சந்தையை ரஷ்ய உள்நாட்டு ராணுவ மோதல் நேரடியாக பாதிக்காது என்றாலும் இதன் மூலம் பாதிப்பை எதிர்கொள்ளும் நாடுகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையை விடுத்து வெளியேற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குசந்தையில் கச்சா எண்ணெய் சார்ந்த நிறுவன பங்குகள் சில தடுமாற்றங்களை எதிர்கொள்ள அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications