ரஷ்யாவின் பெரும் பணக்காரர்கள், குடும்ப நிறுவனங்கள் மற்றும் கருவூலங்களின் உபரி நிதிகள் முதலீடு செய்வதற்கான பாதுகாப்பான வழிகளைத் தேடி வரும் வேளையில், ரஷ்யாவில் உள்ள சில பெரிய வங்கிகள் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களாக (FPIs) காலடி எடுத்து வைக்க திட்டமிட்டு வருகிறது.
ரஷ்யாவின் இரண்டாவது பெரிய வங்கியான VTB, FPI உரிமத்தைப் பெற இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி அமைப்பை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடம் மார்ச் மாதம் முதல், மூன்று ரஷ்ய வங்கி அல்லாத சொத்து மேலாளர்கள் தங்களை FPI களாக செபி அமைப்பில் பதிவு செய்துள்ளனர்.

இதில் VTB வங்கி என்பது ரஷ்யாவின் அரசு பெரும் பங்குகளை கொண்டு, ஒரு அரசு வங்கியாக இயங்குவது. இந்த நிலையில் VTB ரஷ்ய வங்கியை FPI ஆக பதிவு செய்ய இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் அவசியம்.
புதிய FPI ரிஜிஸ்ட்ரேஷன் மற்றும் ஏற்கனவே உள்ள உரிமங்களைப் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் செபி அமைப்பால் ஒப்புதல் அளிக்கப்படும். அதேவேளையில் FPI ரிஜிஸ்ட்ரேஷன் விண்ணப்பிப்பது, இந்தியாவில் கிளை அலுவலகத்தைக் கொண்ட வெளிநாட்டு வங்கியாக இருக்கும்போது, ரிசர்வ் வங்கியின் அனுமதி அவசியம். இந்தியாவில் Sberbank மற்றும் Gazprombank போன்ற பிற ரஷ்ய வங்கிகளும் உள்ளது.
ரஷ்யாவின் இரண்டாவது பெரிய வங்கியான VTB, FPI உரிமத்தைப் பெற்றால் பெரும் தொகை இந்திய சந்தையில் முதலீடு செய்யப்படும். குறிப்பாக பங்குச்சந்தை, பத்திரங்கள் என பல துறையில் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய முதலீடுகள் வெளியேறும் போது ஏற்படும் தாக்கம் குறைய வாய்ப்புகள் உள்ளது.
ஏற்கனவே இந்தியா, ரஷ்யா மத்தியிலான நட்புறவு பெரிய அளவில் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் ரஷ்யாவின் நிதி ஆதாரத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் இந்தியா உதவ உள்ளது. இதனால் இந்தியாவுக்கும் பலன் இருக்கும் காரணத்தால் இதை WIN - WIN தருணம் என கூறலாம்.


Click it and Unblock the Notifications