ரஷ்யா 2022 இல் உக்ரைன் மீதான போரைத் தொடங்கியதையடுத்து, ஐரோப்பிய வங்கிகள் பெரும்பாலும் ரஷ்யாவில் இருந்து வெளியேறிவிட்டன. இந்த சூழலில், ஜெர்மனி வங்கியான டாய்ட்ச் வங்கி மற்றும் இத்தாலிய வங்கியான யுனி கிரெடிட் ஆகியவற்றின் சொத்துகளை முடக்குமாறு ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பின்பு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் ரஷ்ய அரசுக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் ரஷ்ய அரசுடன் நெருங்கிய தொடர்புடைய தொழிலதிபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் எதிரொலியாக ரஷ்யாவில் இருக்கும் பிற நாடு சொத்துக்களையும், வர்த்தகத்தையும், நிறுவனங்களையும் முடக்க துவங்கியது. இதன் ஒரு பகுதியாக தற்போது ஜெர்மனி வங்கியான டாய்ட்ச் வங்கி மற்றும் இத்தாலிய வங்கியான யுனி கிரெடிட் ஆகியவற்றின் சொத்துகளை முடக்குமாறு ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி: மே 16 ஆம் தேதியிட்ட ஆவணங்களின்படி, செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நீதிமன்றம் டாய்ட்ச் வங்கியிடமிருந்து 239 மில்லியன் யூரோக்கள் (தோராயமாக $260 மில்லியன்) மதிப்பிலான சொத்துகளை முடக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதே நாளில், இத்தாலிய வங்கியான யுனி கிரெடிட்டின் சுமார் 463 மில்லியன் யூரோ மதிப்பிலான சொத்துகளை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுகள், ரஷ்ய நிறுவனமான ருஸ்கிம்அலியன்ஸ் (RusKhimAlians) தாக்கல் செய்த வழக்கை அடுத்து வந்தவை. ஜெர்மன் நிறுவனமான லிண்டேவுடன் இணைந்து ஒரு பெரிய எரிவாயு சுத்திகரிப்பு மற்றும் திரவமாக்கல் ஆலையை கட்டமைக்கும் திட்டத்தில் ருஸ்கிம்அலியன்ஸ் ஈடுபட்டிருந்தது. ஆனால், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையின் காரணமாக லிண்டே இந்த திட்டத்தில் இருந்து விலகியது.
வழக்கு யார் மீது?: இந்த திட்டத்திற்கான உத்தரவாத நிறுவனங்களாக இருந்த யுனி கிரெடிட் மற்றும் டாய்ட்ச் வங்கி ஆகியவற்றின் மீது ருஸ்கிம்அலியன்ஸ் வழக்கு தொடர்ந்தது.
யுனி கிரெடிட்டின் நிலைமை: 2022 இல் உக்ரைன் மீதான போரைத் தொடங்கியபோது, யுனி கிரெடிட் ரஷ்யாவில் அதிகம் செயல்பட்டு வந்த ஐரோப்பிய வங்கிகளில் ஒன்றாக இருந்தது. ரஷ்யாவில் பெரிய கிளை நிறுவனம் ஒன்றையும் இயக்கி வந்தது.
விற்பனை: போரைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதித்த தடை உத்தரவுகளை மதிக்கும் வகையில், கடந்த ஆண்டு யுனி கிரெடிட் தனது ரஷ்ய கிளை நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான ஆரம்ப கலந்துரையாடல்களைத் தொடங்கியது. ஆனால், இதுவரை இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தது.
CEO கதறல்: யுனி கிரெடிட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆண்ட்ரியா ஓர்செல், தனது நிறுவனம் ரஷ்யாவில் இருந்து வெளியேற விரும்புவதாகத் தெரிவித்தார். ஆனால், 3 பில்லியன் யூரோ மதிப்புள்ள ரஷ்ய கிளை நிறுவனத்தை இலவசமாக வழங்குவது மதிக்க தகாத செயல். போர் தொடர்பான ரஷ்யா மீதான மேற்கத்தியத் தடை உத்தரவுகளின் காரணமாக இத்தகைய நடைமுறையை ஏற்க முடியாது என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications