உலகின் பல்வேறு பதற்றமான காரணிகளுக்கு மத்தியிலும் இந்திய ஆயில் சுத்திகரிப்பாளர்கள், ரஷ்யாவின் எண்ணெயை தொடர்ந்து வாங்கி வருகின்றனர். சொல்லப்போனால் இன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் முன்னணி சப்ளையராக மாறியுள்ளது.
எப்படியேனும் ரஷ்யாவினை தனிமைப்படுத்தி விட மாட்டோமா? என்று மேற்கத்திய நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன.
இதன் காரணமாக ரஷ்யா முடங்கி விடும். குறிப்பாக பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த நினைத்த நாடுகளுக்கு, ஏமாற்றமே காத்திருந்தது எனலாம். ஏனெனில் ரஷ்யா தள்ளுபடி விலையில் எண்ணெய் விற்பனை என்ற ஆயுதத்தினை கையில் எடுத்தது.
தள்ளுபடி விலையில் இறக்குமதி வரி
குறிப்பாக இந்தியா, சீனா என சில நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் சப்ளை செய்து வருகின்றது. இது வரலாறு காணாத அளவுக்கு இறக்குமதியினை செய்துள்ளன. தேவையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக தள்ளுபடி விலையில் இறக்குமதி மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகின்றது.
இன்னும் மலிவான எண்ணெய் அதிகம் கிடைக்கலாம்
அடுத்த மாதம் இன்னும் விலை மலிவான கச்சா எண்ணெய், இந்தியாவுக்கு அதிகளவில் கிடைக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் ரஷ்யா ஐரோப்பாவுக்கு கடல் வழியாக அனுப்பப்படும் கச்சா எண்ணெய் மொத்தமாக நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பாவுக்கு சிக்கல் அதிகரிக்கலாம் என்றாலும், ஐரோப்பாவுக்கு செல்லும் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ விற்பனை செய்யப்பட வேண்டிய நிலையில் ரஷ்யா உள்ளது. அப்படி இல்லாவிட்டால் தனது உற்பத்தியினை குறைக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது.
இந்தியா சீனா முக்கிய வாடிக்கையாளர்கள்
அப்படி நிறுத்தினால் இது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யை அதிகரிக்க ஒபெக் நாடுகள் தீர்மானிக்கலாம்.
எப்படியிருப்பினும் இன்றைய காலகட்டத்திலும் பற்பல சவால்களுக்கு மத்தியிலும், இந்தியா சீனா என்பது ரஷ்யாவின் முக்கிய வாடிக்கையாளர்கள். ஆக இவர்களுக்கு சப்ளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. உக்ரைனில் நடந்து வரும் போருக்கு மத்தியில், ரஷ்யாவின் முக்கியமான வர்த்தக பங்காளிகளாக சீனாவும் இந்தியாவும் மாறிவிட்டன.
தேவை அதிகரிக்கலாம்
தற்போது சீனா கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வினை அளித்துள்ள நிலையில், எரிபொருள் தேவையானது அதிகரிக்கலாம். இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாறு காணாத அளவுக்கு இறக்குமதி
இந்தியா ரஷ்யா எண்ணெய் அதிகளவில் வாங்கி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுடன் எண்ணெய் வாங்கி, அதனை சுத்திகரிப்பு செய்து சப்ளை செய்வதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன. எனினும் இதனை கண்டு கொள்ளாத இந்தியா தொடர்ந்து சப்ளை செய்து வருகின்றது.
வரலாறு காணாத இறக்குமதி
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியானது கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. Cartel உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மொத்த எண்ணெய் இறக்குமதியில் சுமார் 62% ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டுகளில் இருந்த நிலையில் 71% அளவுக்கு ஆக இருந்தது.
தொடர்ந்து அதிகரிக்கலாம்
இந்தியா தொடர்ந்து சவுதி அரேபியாவிடம் இருந்து தொடர்ந்து இறக்குமதியினை எப்போதும் போல தொடரலாம் என்றாலும், ரஷ்யாவிடம் இருந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு சந்தர்ப்பவாத செயல் என்றாலும், இந்தியாவுக்கு தேவை அதிகம் உள்ள நிலையில், இந்திய மக்களின் நலனை கருத்தில் கொண்டு இதனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications