இந்தியாவின் முக்கிய வர்த்தக நாடாக மாறி வரும் ரஷ்யா, மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளைத் தாண்டி வேகமாக வளர்ச்சி அடையவும், ஒருபோது தனித்து இருந்துவிடக் கூடாது என்பதற்காகப் பல முக்கியமான முயற்சிகளைச் செய்து வருகிறது.
இதில் முக்கியத் திட்டமாக இந்தியாவுக்கு அதிகப்படியான தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் ரஷ்யா பிற முக்கியமான துறையில் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதற்காக இந்தியர்களையும், இந்திய நிறுவனங்களையும், இந்திய முதலீடுகளையும் ஈர்க்க புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது.
ரஷ்யாவின் புதிய திட்டத்தின் பெயர் ரஷ்ய கோல்டன் விசா.
ரஷ்யா
மேற்கத்திய நாடுகளின் தடை ரஷ்யாவுக்குப் பெரிய பாதிப்பாக இருந்தாலும் தொடர்ந்து வர்த்தகத்தையும், வருமானத்தையும் பெற்று வருகிறது. இதன் அடுத்தகட்டமாக 2023 ஜனவரியில் ரஷ்ய கோல்டன் விசா என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ரஷ்ய கோல்டன் விசா
ரஷ்ய கோல்டன் விசா திட்டத்தின் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ரஷ்யாவிற்கு ஈர்ப்பதில் ரஷ்ய அரசின் முக்கிய முயற்சியாக விளங்குகிறது. மேலும் இத்திட்டம் மூலம் இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வேகமாக விசா அளிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
ரஷ்யாவில் குடியுரிமை
ரஷ்ய கோல்டன் விசா திட்டம், ரஷ்யாவிற்குச் சென்று நிரந்தரமாக வசிக்க விரும்பும் இந்தியர்களுக்கும், இதேபோல் ரஷ்யாவில் குடியுரிமை அதாவது நிரந்தரமாகத் தங்காமலேயே அந்நாட்டின் குடிமக்களுக்குக் கிடைக்கும் அனைத்து முதலீட்டு நன்மைகள் பெற விரும்பும் இந்திய முதலீட்டாளர்களுக்கும் பெரிய ஜாக்பாட் ஆகும்.
முதலீடு
கோல்டன் விசா திட்டம் உலகில் பல நாடுகளில் வழங்கப்படுகிறது, இதில் பெரும்பாலான திட்டம் முதலீடு ஈர்ப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ரஷ்யா நிரந்தரமாகத் தங்காமலேயே அந்நாட்டின் குடிமக்களுக்குக் கிடைக்கும் அனைத்து முதலீட்டு நன்மைகளையும் இந்தக் கோல்டன் விசா மூலம் அளிக்கிறது.
பிற வழிகள்
கோல்டன் விசா திட்டத்திற்கு முன்பு ரஷ்யாவில் வெளிநாட்டினருக்கான நிரந்தரக் குடியுரிமை பெற வேண்டும் என்றால் பல்வேறு ஒதுக்கீடு உள்ளது. அதில் முக்கியமான சில ஒரு ரஷ்ய பெண் / ஆண் உடன் திருமணம், ரஷ்ய குழந்தை பெறுவது, ரஷ்ய பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ பட்டம் பெறுவது, வேலை வாய்ப்பு பெறுவது வாயிலாக நிரந்தரக் குடியுரிமை பெற முடியும்.
நீண்டகால நட்புறவு
ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் மத்தியில் நீண்டகால நட்புறவு உள்ளது. குறிப்பாக உக்ரைன் மீதான போருக்கு பின்பு ரஷ்யா மீது சர்வதேச தடைகளை விதித்த வேளையில் இரு நாடுகள் மத்தியிலான நடப்புறவு மேம்பட்டு உள்ளது. இதன் வெளிப்பாடு தான் இந்தச் சிறப்புக் கோல்டன் விசா திட்டம், இத்திட்டம் மூலம் இந்தியர்களை அதிகளவில் ஈர்ப்பதே ரஷ்யாவின் முக்கிய இலக்கு.
PASSIVE முதலீடு வாய்ப்புகள்
கோல்டன் விசா திட்டமானது ரஷ்யாவில் ஒரு நிறுவனத்தை அமைப்பதில் இருக்கும் முதலீட்டு வாய்ப்பை வழங்குவது மட்டும் அல்லாமல். ரஷ்ய பங்குச் சந்தையில் முதலீடு செய்வது போன்ற PASSIVE முதலீடு வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கிறது.
ரஷ்யாவில் தற்போது பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் மிகவும் முக்கியமான முதலீட்டு வாய்ப்பாக உள்ளது.
குடும்பம்
கோல்டன் விசா திட்டத்தின் கீழ், முதலீட்டாளருக்கு மட்டுமின்றி, மனைவி, குழந்தைகள், பெற்றோர், தாத்தா, பாட்டி, பேரக்குழந்தைகள் போன்ற அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் ரஷ்யாவில் குடியுரிமை வழங்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications