ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனையானது ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை என்பது உலகளாவிய பிரச்சனையாக மாறியுள்ளது.
இதற்கிடையில் ரஷ்யாவினை எப்படியேனும் முடக்கி விட மாட்டோமா? என மேற்கத்திய நாடுகள் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ரஷ்யாவுக்கு தடை
குறிப்பாக ரஷ்யாவில் எரிபொருள் வாங்குவதை தடுக்கும் விதமாக சில அறிவிப்புகளை வெளியிட்டன. இதன் காரணமாக ஏற்கனவே மேற்கத்திய நாடுகள் சில ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை தடை செய்துள்ளன. சில நாடுகள் படிப்படியாக குறைத்து கொள்வதாகவும் அறிவித்துள்ளன.
தள்ளுபடி விலையில் எண்ணெய்?
ஆனால் ரஷ்யாவோ இதற்கெல்லாம் சோர்ந்து போகாமல் சலுகை விலையில் விற்பனை என்னும் மிகப்பெரிய ஆயுதத்தினை கையில் எடுத்தது. குறிப்பாக மிகபெரிய அளவில் தேவையை கொண்டு இருக்கும் இந்தியா சீனாவினை, இந்த ஆயுதம் மூலம் இன்று வரையில் தங்கள் வசம் வைத்துள்ளது. ஆனால் இதுவே இன்று ரஷ்யாவுக்கு வாய்ப்பினை கொடுத்துள்ளது எனலாம்.
மற்ற நாடுகளிலும் தேவை?
இதுவரையில் இந்தியா சீனாவுக்கு மட்டுமே தள்ளுபடி விலையில் கொடுத்து வந்த நிலையில், மற்ற நாடுகளும் இந்தியா, சீனாவுக்கு கொடுப்பதை போலவே தள்ளுபடி விலையில் அணுகின. இதற்கிடையில் ரஷ்யா மீண்டு எழ முடியாது என நினைத்த மேற்கத்திய நாடுகளுக்கு இது பெரும் அதிர்ச்சி அளிக்கும் ஒரு விஷயமாகவும் மாறியுள்ளது.
அதிகளவில் தேவை
இதற்கிடையில் ரஷ்யாவின் யூரல்ஸ் மற்றும் ESPO கச்சா எண்ணெய் விலை என பலவும் கடந்த வாரத்தில் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. அதிகரித்து வரும் தேவை மற்றும் ஆர்டர்களுக்கு மத்தியில், இது அதிக விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு வழிவகுத்துள்ளது என கூறப்படுகின்றது. குறிப்பாக சீனாவின் பல பெரிய பெரிய சுத்திகரிப்பாளர்களும், அதிகளவில் எண்ணெய் வாங்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
விலை அதிகரிப்பு
கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது பேரலுக்கு 2 டாலர்களுக்கு மேலாக அதிகரித்துள்ளதாகவும், இது டிசம்பர் மாதம் விதிகப்பட்ட தடைக்கு பிறகு இந்த அளவுக்கு விலை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு பயந்தாலும், தற்போது இந்தியா சீனாவினை பார்த்து பலரும் ரஷ்யாவினை அணுக ஆரம்பித்துள்ளனர். இதனால் ரஷ்யாவின் எண்ணெய்-க்கு தற்போது தேவை என்பது கூட ஆரம்பித்துள்ளது எனலாம்.
மேற்கத்திய நாடுகள் அதிருப்தி
குறிப்பாக இது ரஷ்ய பொருளாதாரத்திற்கும் உந்துதலாக அமையும் எனலாம். இது ரஷ்யாவின் கரன்சியும் ஏற்றம் காண வழிவகுக்கலாம். மொத்தத்தில் இது மேற்கத்திய நாடுகள் மத்தியில் பெரும் அதிருப்தியினை கொடுக்கலாம். அதேசமயம் ரஷ்யாவுக்கு இது நல்ல விஷயமாகவும் மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications