உக்ரைன் போருக்கு பின்பு இந்தியாவின் முக்கிய கச்சா எண்ணெய் சப்ளையராக மாறி ரஷ்யா, தனது பொருளாதாரத்தை தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்-ஐ இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் விற்பனை செய்து தான் காப்பாற்றி வருகிறது. இந்த நிலையில் இந்தியா இந்த தள்ளுபடியை பயன்படுத்தி போருக்கு முன்பு 2 சதவீதமாக இருந்த ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி தற்போது 46 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இந்தியா வெளிநாட்டு கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியிருக்கும் காரணத்தால் அனைத்து முக்கிய சப்ளையர்களுடன் நல்ல உறவை நிலைநாட்ட வேண்டிய கணக்கு உள்ளது. இதை செய்ய இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவீட்டில் முக்கிய மாற்றத்தை செய்ய வேண்டிய கட்டாயம் தற்போது உருவாகியுள்ளது.

ஜூன் மாதம், இந்திய ஒரு நாளுக்கு 2.2 மில்லியன் பேரல் அளவிலான கச்சா எண்ணெய்-ஐ இறக்குமதி செய்துள்ளது. இதில் 1.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்-ஐ ரஷ்யாவில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்துள்ளது என KPLER தெரிவித்துள்ளது. இந்தியா தனது அப்பர் லிமிட்-ஐ நெருங்கியுள்ள நிலையில் முக்கிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மே மாத மொத்த இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு மட்டும் 46 சதவீதம்.
இந்த சூழ்நிலையில் அடுத்த மாதத்தில் இருந்து இந்தியா, ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க நேரிடும். இதற்கு ஏற்றார் போல் ரஷ்யா-வின் சர்வதேச சந்தைக்கான சப்ளை-ஐ குறைத்துள்ளது, இதனால் இந்தியா சவுதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஏப்ரல் மாத நிலவரப்படி இந்தியா வாங்கிய சவுதி கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 86.96 டாலர், அதுவே ரஷ்யா கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 68.21 டாலர். இந்த சூழ்நிலையில் இந்தியா, ரஷ்யா கச்சா எண்ணெய் அல்லாமல் பிற நாட்டு கச்சா எண்ணெய் வாங்கினால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையும் வாய்ப்புகள் மறையும்.
இந்தியன் ஆயில் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் அதிகப்படியான ரஷ்யா கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. தற்போது WTI கச்சா எண்ணெய் விலை 70.37 டாலர், பிரெண்ட் கச்சா எண்ணெய் 75.16 டாலர், முர்பான் கச்சா எண்ணெய் விலை 75.87 டாலர், OPEC கச்சா எண்ணெய் விலை 74.14 டாலர்.
சமீபத்தில் தான் மத்திய அரசின் முக்கிய அமைச்சர்கள் எரிவாயு மற்றும் எரிபொருள் விலை மாற்றம் குறித்து முடிவு செய்ய முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பது மட்டும் அல்லாமல் ரஷ்யாவிடம் இருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு இருக்க வாய்ப்புகள் உண்டு.
மத்திய அரசு ரஷ்யாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய்-ஐ வாங்க அதாவது 50 சதவீத லிமிட்-க்கும் அதிகமாக வாங்க முடிவு செய்தால், அடுத்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை குறையும்.


Click it and Unblock the Notifications