சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி சந்தையில் வலைகுடா நாடுகளுக்கு பின்பு அதிகளவில் ஆதிக்கம் செய்யும் நாடு என்றால் அது ரஷ்யா தான். ராஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் பெருமளவு ஐரோப்பாவிற்கும் பிற சோவியத் யூனியன் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு பின்பு ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஐரோப்பா, அமெரிக்காவிற்கு மொத்தமாத தடை செய்யப்பட்டு, இந்தியா போன்ற பல நாடுகளுக்கு மலிவு விலையில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் சமீபத்தில் பாகிஸ்தான் பல மாத பேச்சுவார்த்தைக்கு பின்பு ரஷ்ய கச்சா எண்ணெய்-ஐ வாங்க துவங்கியது.

இந்த நிலையில் தற்போது ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் மாறுப்பட்ட முடிவை எடுத்துள்ளது. சவுதி அரேபியா போலவே ரஷ்யாவும் அதிகளவிலான கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளது, இதன் மூலம் இந்தியாவின் இறக்குமதி அளவுகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
வளைகுடா நாட்டு கச்சா எண்ணெய்க்கும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கும் பெரிய வித்தியாசம் உள்ளது, ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் அதிகப்படியான சல்பர் இருக்கும் காரணத்தால் சுத்திகரிப்பில் கூடுதல் பணியும், செலவுகளும் ஆகும்.
இந்த நிலையில் ஜூலை மாதம் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ஒரு நாளுக்கு 2,69,000 பேரல் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. இது ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து அதிகரிக்கும் என கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவின் சப்ளை, இந்தியாவின் இறக்குமதி விருப்பத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை.

ஆனால் பாகிஸ்தான் பல மாத பேச்சுவார்த்தைக்கு பின்பு ரஷ்யாவில் இறக்குமதி செய்யப்பட்ட ரஷ்யா கச்சா எண்ணெய்-க்கு தற்போது புதிதாக ஒரு முட்டுக்கட்டை போட்டு உள்ளது. பாகிஸ்தான் தற்போது கச்சா எண்ணெய் தரம் காரணமாக 2 ஷிப்மெண்ட்-க்கு பின்பு மொத்தமாக நிறுத்தி வைத்துள்ளது.
பாகிஸ்தான் அரசு ரஷ்யாவின் கச்சா எண்ணெய் தரம் மேசமாக இருப்பதாகவும், தனது சுத்திகரிப்பு ஆலையில் அரேபிய கச்சா எண்ணெய் பயன்படுத்தும் போது கிடைக்கும் பெட்ரோல் உற்பத்தியும் குறைகிறது. 20 சதவீதம் கூடுதலாக Furance oil செலவாகிறது என தெரிவிக்கிறது. இதனால் போராடி பெற்ற தள்ளுபடி விலை ரஷ்யா எண்ணெய்-ஐ நிறுத்துகிறது.
ரஷ்யாவிலிருந்து இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் ஜூன் 11 மற்றும் 26 ஆம் தேதிகளில் கராச்சி துறைமுகத்திற்கு வந்தன, அதன் பிறகு ரஷ்ய எண்ணெய் கப்பல் எதுவும் பாகிஸ்தானுக்கு வரவில்லை. முதல் கப்பலில் 45,000 டன் கச்சா எண்ணெய் கொண்டு வரப்பட்டது, இரண்டாவது கப்பலில், சுமார் 56,000 டன் கச்சா எண்ணெயுடன் ஜூன் 26 அன்று கராச்சி துறைமுகத்திற்கு வந்தது.

ஆனால் இந்தியா தொடர்ந்து ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது, தள்ளுபடியில் பெற்றாலும் பெட்ரோல், டீசல் விலை குறையாமலும் உள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

துரந்தர் படத்தின் வசூலில் பங்கு கேட்கும் பாகிஸ்தான் மக்கள்!! இதென்ன புது பிரச்சினை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications