ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒருவர் ஆர்ட்டிபிஸியல் இன்டெலிஜென்ஸ் வாயிலாக தனது மனைவியை கண்டுபிடித்தாக கூறியுள்ளார். ஆல் 90ஸ் கீட்ஸ் இதை கேளுங்க..
ரஷ்யாவை சேர்ந்த 23 வயதான சாப்ட்வேர் டெவலப்பர் அலெக்சாண்டர் ஜாதன், டிண்டரில் மோசமான ப்ரொபைல்-களை தவிர்ப்பதற்கு ChatGPT மற்றும் பிற AI போட்களைப் பயன்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் ஒரு வருடத்தில் சுமார் 5,000 பெண்களைச் சந்தித்துள்ளார், இந்த செயல்முறையில் "AI- Soulmate" ஆன கரினா இம்ரானோவ்னா என்ற பெண்ணை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான RIA நோவோஸ்டி செய்தி வெளியிட்டுள்ளது.
அலெக்சாண்டர் ஜாதன் இதுக்குறித்து கூறுகையில் இந்த ஏஐ சாட்பாட்-யில் நான் எப்படி தொடர்புகொள்கிறேன் என்பது பற்றிய தகவலை சாட்ஜிபிடிக்கு வழங்கினேன். இந்த புரோகிராம் என்னை அறியாததால் ஆரம்பத்தில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன.
என்னைப் போன்றே பெண்களுடன் தொடர்பு கொள்ளும் அளவுக்கு நான் இந்த ஏஐ பயிற்றுவித்தேன். முதல் கட்டமாக
ஏஐ போட் மோசமான பொருத்தங்களை நீக்கியது. ஏஐ தொழில்நுட்பம் அவரை போலவே டேட்டிங் சைட்டில் பேச்சுக்களை துவங்கும்.
இதே கட்டமைப்பில் சந்திக்கும் நாள் முடிவு செய்வதில் இருந்து அவருக்கு பிடித்தமான பெண்ணிடம் புரொபஸ் செய்யவும் இந்த ஏஐ பாட் உதவியுள்ளது.
அவர் எந்த பெண்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்பதைக் காட்டும் சில பில்டர்களையும் நிறுவியதாக ஜாதன் கூறினார்.
விரைவில், ஜாதன் நிஜ வாழ்க்கையில் கரினா என்ற பெண்ணை சந்தித்தார். அவருடன் கடிதப் பரிமாற்றத்தைத் தொடர ஏஐ தளத்தைப் பயன்படுத்தினார். கரினாவும் நானும் நேரலையில் சந்தித்தபோது, இந்த திருமணம் சாத்தியம் என்பதை உணர்ந்தேன். கரினாவுடனான கடிதப் பரிமாற்றத்தை தொடர்ந்தேன் என்று அவர் கூறினார்.
அந்த பெண்ணுடன் எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று நியூரல் நெட்வொர்க் அவரிடம் கூறியது. 23 வயதான அவர், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் தான் கரினாவிடம் முன்மொழியுமாறு சாட்ஜிபிடியிடம் பரிந்துரைத்ததாகவும், தங்களது உறவு சீரானதாகவும் வலுவாகவும் உள்ளது என்று விளக்கினார்.
நேரில் சென்று பார்த்து நல்ல மணப்பெண்ணை பார்ப்பது இப்போதெல்லாம் சிரமமாகிவிட்ட நிலையில் சாட்ஜிபிடி போன்ற டேட்டிங் தளங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
தங்களுக்குத் தகுதியான மணப் பெண் அல்லது மண மகன்கள் பற்றிய விவரங்களை வைத்து இந்த தளங்கள் மூலமாக தங்களது விருப்பமான வாழ்க்கைத் துணையை மக்கள் பெறுவதற்கு பலனளிக்கிறது.
இப்போது இதுபோன்ற ஆன்லைன் டேட்டிங் தளங்கள் மூலம் தங்களுக்குப் பொருத்தமான ஜோடிகளைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications