இந்தியாவில் கொரோனா 2வது அலையில் அதிகளவிலான தொற்று ஏற்பட்டு உள்ள காரணத்தால் அவசரக் கால அடிப்படையில் மத்திய அரசின் ஒப்புதலின் அடிப்படையில் இந்தியாவில் பயன்படுத்த ரஷ்யாவில் இருந்து ரஷ்ய ஸ்புட்னிக் வி வேக்சின் இறக்குமதி செய்யப்பட்டது.
மே 1ஆம் தேதி இறக்குமதி செய்யப்பட்ட ரஷ்ய ஸ்புட்னிக் வி வேக்சின் மே 13ஆம் தேதி சென்டர் டிரக் லேப் 13ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மே 14ஆம் தேதி முதலே மக்களுக்குச் சாப்ட் லான்ச் முறையில் தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக டாக்டர் ரெட்டி லேப்ஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் ரஷ்ய ஸ்புட்னிக் வி வேக்சின் விலையை அறிவித்துள்ளது டாக்டர் ரெட்டி லேப்ஸ்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வேக்சின்
முதல் கட்டமாக ரஷ்யாவில் இருந்து மே 1ஆம் தேதி ஸ்புட்னிக் வி வேக்சின் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் அனைத்து விதமான ஒப்புதலும் கிடைத்து மக்களுக்குப் பயன்படுத்தத் துவங்கப்பட்டு உள்ள வேளையில் அடுத்தடுத்து இறக்குமதிகள் விரைவில் வரும் என டாக்டர் ரெட்டி லேப்ஸ் தெரிவித்துள்ளது.
சீரம் - astrazeneca கூட்டணி
இதேவேளையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் வி வேக்சின் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ரெட்டி லேப்ஸ் தெரிவித்துள்ளது. சீரம் நிறுவனம் astrazeneca நிறுவனத்தின் கோவிஷீல்டு வேக்சினை இந்தியாவில் தயாரிப்பது போல், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வேக்சினும் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது.
ஸ்புட்னிக் வி வேக்சின் விலை
தற்போது இறக்குமதி செய்யப்படும் ஸ்புட்னிக் வி வேக்சின் விலை 948 ரூபாய் மற்றும் 5 சதவீத ஜிஎஸ்டி சேர்த்து விற்பனை செய்யப்பட உள்ளது என ரெட்டி லேப்ஸ் தெரிவித்துள்ளது. உள்நாட்டுத் தயாரிப்பில் உருவாகும் வேக்சின் பயன்பாட்டுக்கு வரும் போது இதன் விலை கட்டாயம் குறையும் எனவும் தெரிவித்துள்ளது.
எங்கு எப்போது கிடைக்கும்..?!
மே 14ஆம் தேதி முதல் சாப்லான்ச் முறையில் ஹைதராபாத்-ல் வேக்சின் அளிக்க துவங்கப்பட்டு உள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் ஆந்திரா மற்றூம் ஹைதராபாத் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த இறக்குமதியில் அனைவருக்கும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
6 உற்பத்தி நிறுவனங்கள்
ஸ்புட்னிக் வி வேக்சின்-ஐ இந்தியாவில் தயாரிக்கச் சுமார் 6 உற்பத்தி நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது டாக்டர் ரெட்டி லேப்ஸ். விரைவில் ஸ்புட்னிக் வி வேக்சின் உற்பத்தி இந்தியாவில் துவக்கப்படும் என ரெட்டி லேப்ஸ் தெரிவித்துள்ளது.
டாக்டர் ரெட்டி லேப்ஸ்
இதற்காக டாக்டர் ரெட்டி லேப்ஸ் அரசு, தனியார நிறுவனங்கள், பங்குதாரர்கள் என அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் ஸ்புட்னிக் வி வேக்சின் நாட்டில் அதிகப்படியானோருக்குக் கிடைக்க வேண்டும் என்பதே தனது முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது டாக்டர் ரெட்டி லேப்ஸ்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications