உலக நாடுகள் அடுத்தடுத்து தடை விதித்து ரஷ்யாவை மொத்தமாக ஒதுக்கி வைத்துள்ள நிலையில் பல முன்னணி நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளது. இதனால் ரஷ்ய நிறுவனங்கள் வெளியேறிய வெளிநாட்டு நிறுவனங்களின் வர்த்தகத்தைத் தொடர்ந்து கைப்பற்றி வருகிறது.
இவ்வளவு பலன் இருக்கா.. பிக்சட் டெபாசிட் செய்ய இது சரியான தருணம்..!
ஆனால் உலகின் பல முன்னணி பிராண்டுகள் வெளியேறிய பின்பு அந்த இடத்தைப் பிடிப்பதும், மக்களுக்கு அதே பிராண்ட் தாக்கத்தை ஏற்படுத்துவதும் மிகவும் கடினம் என்பதால், முன்னணி பிராண்டு நிறுவனங்களின் பிராண்டை போலவே லோகோ கொண்டு இயங்க பல நிறுவனங்கள் துவங்கியுள்ளது.

அங்கிள் வான்யா
ரஷ்யாவின் முன்னணி பாஸ்ட் புட் நிறுவனமான அங்கிள் வான்யா ( Uncle Vanya) தற்போது அமெரிக்காவின் முன்னணி பர்கர் மற்றும் QSR பிராண்டான மெக் டொனால்ட் வர்த்தகத்தை மொத்தமாகக் கைப்பற்றி ரஷ்யா முழுவதும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளது.

டிரேட்மார்க்
இதற்கு அங்கிள் வான்யா செய்த முதல் காரியம் என்ன தெரியுமா, ரஷ்ய அரசிடம் B என்ற எழுத்தை ஸ்டைலான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி புதிய லோகோ-விற்கு டிரேட்மார்க் பெற விண்ணப்பம் கொடுத்துள்ளது. இதில் என்ன இருக்கு என நீங்கள் கேட்கலாம், ஆனால் இதில் தான் முக்கியமான விஷயமே உள்ளது.

M, B லோகோ
மெக் டொனால்ட் லோகோவான M-ஐ திருப்பிப் போட்டு B என்ற மாற்றியுள்ளது. இதிலும் முக்கியமாக மெக் டொனால்ட் லோகோவான M-ஐ வடிவத்தைப் போலவும், அதே சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் லோகோவை பதிவு செய்துள்ளது. மேலும் ரஷ்ய மொழியில் B என்பதை Ve என அழைக்கப்படுகிறது, இதனால் அங்கிள் வான்யா பிராண்ட் B என்ற எழுத்தை பயன்படுத்தியுள்ளது.

ரஷ்ய முகவரி
மேலும் அங்கிள் வான்யா இந்தப் புதிய டிரேட்மார்க்-ஐ ரஷ்ய முகவரியில் பயன்படுத்தியுள்ளது. இதேவேளையில் அமெரிக்கா, ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்துள்ள காரணத்தால் வழக்கு தொடுக்கும் அதிகாரத்தையும் இழந்துள்ளது.

800 கடைகள்
மெக் டொனால்ட் ரஷ்யாவில் இருக்கும் 800 கடைகளை மொத்தமாக மூடிவிட்டு ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்த 3வது நாளில் அங்கிள் வான்யா தனது புதிய லோகோ-வை பதிவு செய்துள்ளது. ரஷ்யாவில் மெக் டொனால்ட் அதிகளவிலான மக்களுக்குப் பிடித்த பிராண்டாக விளங்கியது.

ரஷ்ய மக்கள்
மெக் டொனால்ட் கடைகள் மூடும் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, ரஷ்ய மக்கள் மெக்டொனால்டின் உணவை வாங்க கடைகளுக்கு முன் வரிசை கட்டினர். இதுமட்டும் அல்லாமல் மெக் டொனால்ட் பிராண்டின் சூப்பர் ஃபேன் ஒருவர் அதை மூடுவதைத் தடுக்க ஒரு கடையில் தன்னைச் சங்கிலியால் கட்டிக் கொண்டார்.

OLX தளம்
இதுமட்டும் அல்லாமல் ரஷ்யாவில் நம்ம ஊர் OLX போன்ற தளமான Avito-இல் மெக் டொனால்டின் கடைக்கட்ட உணவுகள், உபகரணங்கள் மற்றும் சர்க்கரைப் பொட்டலங்கள் தாறுமாறான விலைக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.