ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெள்ளிக்கிழமை புதுப்பிக்கப்பட்ட தேசிய வெளியுறவுக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இப்புதிய கொள்கையில் இந்தியாவுடனான வர்த்தக மற்றும் நட்புறவுக்கு அதிகப்படியான முக்கியதுவம் அளித்துள்ளது. இந்தியாவில் நட்புறவுக்கு விளாடிமிர் புடின் பாராட்டினார்.
Recommended Video
ரஷ்யாவின் இப்புதிய தேசிய வெளியுறவுக் கொள்கை மூலம் இந்தியாவுடன் வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப உறவுகளை மேம்படுத்துவதாக அறிவித்தார் விளாடிமிர் புடின்.
ரஷ்யாவுடன் எப்படியாவது நட்பு வைத்துக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் பல முறை முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், விளாடிமிர் புடினின் ரஷ்ய அரசு ஒப்புதல் அளித்துள்ள புதிய தேசிய வெளியுறவுக் கொள்கையில் இந்தியா, சீனா மட்டுமே முக்கிய வர்த்தக உறவாக அங்கீகரித்துள்ளது. இந்த ஆவணத்தில் ஒரு இடத்தில் கூட பாகிஸ்தானை குறிப்பிடவில்லை.
ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் துவங்கிய நாளில் இருந்து ரஷ்யாவுக்கு அனைத்து பிரிவிலும் குறிப்பாக ரஷ்யா அரசின் கஜானாவை பாதுகாக்கும் முக்கிய வர்த்தகமாக கச்சா எண்ணெய்-ஐ இந்தியா தொடர்ந்து அதிகமாக வாங்கி வருகிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு பெரிய நன்மை உள்ளது மறுக்க முடியாத உண்மை.
சீனா
சமீபத்தில் சீனா அரபு நாடுகளிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய் வாங்குவதற்கான ஒப்புந்தத்தையும், முதலீட்டையும் செய்தது. இதன் மூலம் சீனாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.
வெளியுறவுக் கொள்கை
இந்த நிலையில் தான் ரஷ்ய அரசின் புதுப்பிக்கப்பட்ட தேசிய வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவை முக்கிய வர்த்தக கூட்டணி நாடாக அறிவித்துள்ளது.
அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு
இரு தரப்புக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் அடிப்படையில் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் ரஷ்யா இந்திய குடியரசுடன் குறிப்பாக சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை தொடர்ந்து கட்டமைக்கும் என இக்கொள்கையில் ரஷ்யா அரசு குறிப்பிட்டு உள்ளது.
முதலீடு மற்றும் தொழில்நுட்ப உறவு
இந்த கூட்டணி மூலம் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகத்தின் அளவை அதிகரிப்பதற்கும், முதலீடு மற்றும் தொழில்நுட்ப உறவுகளை வலுப்படுத்துவதற்கும், நட்பற்ற மாநிலங்கள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு பிரிவிலும் துணை நிற்கவும் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று புடின் வெளியிட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அமைப்புகள்
மேலும் சர்வதேச நாடுகள் உடனான கூட்டணியை மேம்படுத்துவதற்கு பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, the Commonwealth of Independent States, யூரேசிய பொருளாதார ஒன்றியம், Collective Security Treaty Organisation, RIC (ரஷ்யா, இந்தியா, சீனா) ஆகியவற்றுடன் கூடுதல் பங்கீட்டை அளிக்க உள்ளதாகவும் ரஷ்யா தனது வெளியுறவு கொள்கையில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான்
சமீபத்தில் பாகிஸ்தான் அரசு, மேற்கத்திய நாடுகளிடம் இருந்து நிதியுதவியை பெறுவதற்காக பாகிஸ்தான் தன்னிடம் இருக்கும் 44 T-80UD ரக மெயின் battle tank-களை ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவம் பயன்படுத்த அளிப்பதாக தகவல் வெளியாகியானது. இதுவும் ரஷ்ய புதுப்பிக்கப்பட்ட வெளியுறவு கொள்கையில் பாகிஸ்தானை தவிர்க்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications