ரஷ்யா - உக்ரைன் போர்க்கு மத்தியில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலைகள் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டாலும், பல நிறுவனங்கள் இதனால் அதிகம் பலன் அடைந்து வருகிறது என்றால் மிகையில்லை. இப்படி உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவரின் சம்பளத்தை 52 சதவிகிதம் உயர்த்துள்ளது உங்களுக்கு தெரியுமா..?
பொதுவாக நிறுவனங்களின் சிஇஓ-வுக்கு நிறுவனத்தின் செயல்திறன், லாபம் அடிப்படையில் தான் போனஸ் உடன் அடங்கிய சம்பளம் அதிகரிக்கும். ஒவ்வொரு வருடத்திற்கும் நிர்வாகம் நிர்ணயம் செய்யும் இலக்கை அடையும் பட்சத்தில் ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட போனஸ், பங்குகள், சம்பளம் ஆகிய அனைத்தும் கொடுக்கப்படும். இதுவே இலக்கை காட்டிலும் அதிக வருமானத்தையும், லாபத்தையும் பெற்றுக்கொடுத்தால் கூடுதல் போனஸ் தொகையும் கிடைக்கும்.

ஒரு நிறுவனத்தின் லாபம், வருவாய், வர்த்தகத்தை அதிகரிக்கும் பொறுப்பு சிஇஓ-க்களுக்கு இருக்கும் காரணத்தால் நிறுவனங்கள் அதிகப்படியான சம்பளத்தையும், வளர்ச்சி ஏற்ப போனஸ் தொகையும் அளிக்கிறது. இதேவேளையில் இந்த வளர்ச்சியை எப்படி வேண்டுமானாலும், எதிலிருந்தும் கொண்டு வரும் சுதந்திரம் சிஇஓ-க்கு உள்ளது. இதேபோல் நிறுவனத்தின் போக்கை நிர்வாக குழு கட்டுப்பாடுத்தும்.
இந்த நிலையில் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாத கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் அதன் விலையை தாறுமாறாக உயர்ந்தது. இதில் பலன் அடைந்த உலகின் மிகப்பெரிய அமெரிக்க எண்ணெய் நிறுவனமான ExxonMobil இன் தலைமை நிர்வாக அதிகாரி 2022 ஆம் ஆண்டிற்கான தனது ஊதியத்தில் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளார். இக்காலக்கட்டத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ExxonMobil அதிகபட்ச லாபத்தைக் கண்டது.

ExxonMobil தலைமை நிர்வாக அதிகாரி டேரன் வூட்ஸின் 2021 ஆம் ஆண்டில் 13.5 மில்லியன் டாலர் அளவிலான சம்பளத்தை பெற்ற நிலையில், 2022 ஆம் ஆண்டில் வருடாந்திர ஊதியம் 52 சதவிகித உயர்ந்து 35.9 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் டேரன் வூட்ஸ்-க்கு பம்பர் ஆஃபர் கிடைத்துள்ளசது. இது நிறுவன வருவாய் மற்றும் பங்கு விலை செயல்திறன் அடிப்படையில் கணக்கிடப்பட்டு டேரன் வூட்ஸ்-க்கு ExxonMobil கொடுத்துள்ளது என இந்நிறுவன அறிக்கை கூறுகிறது.

கடந்த ஆண்டு ExxonMobil நிறுவனம் சுமார் 56 பில்லியன் டாலர் மதிப்பிலான லாபத்தை பெற்றுள்ளார், அப்படியானால் ஒரு மணிநேரத்திற்கு சுமார் 6.3 மில்லியன் டாலர் அளவிலான லாபத்தை பெற்றுள்ளார். இது மட்டும் அல்லாமல் ExxonMobil பங்குகள் கடந்த ஆண்டு 160 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications