ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில்.. ரஷ்ய அரசாங்கம் போரில் உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு 5 மில்லியன் ரூபீள்கள் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தது. இது இந்திய மதிப்புக்கு சுமார் 60 லட்சம் ரூபாய். இந்த அறிவிப்புக்கு பின்னர் போருக்கு செல்லும் வீரர்கள் தங்களுடைய குடும்பம் பாதுகாப்பாக இருக்கிறது என்ற தன்னம்பிக்கையுடன் போர்க்களம் செல்கின்றனர்.
ஆனால் இந்த இழப்பீட்டு தோகைக்காகவே சில ரஷ்ய பெண்கள் மோசடி செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய பெண்களை "பிளாக் விடோஸ்" (Black widow) என்று அந்நாட்டு ஊடகங்கள் அழைக்கின்றன.
பிளாக் விடோ மோசடி என்றால்?: ஒரு ராணுவ வீரர் இருக்கிறார் அவருக்கென்று குடும்பம் தனியாக குடும்பம் இல்லை என்றால் அவரை குறி வைத்து போருக்கு செல்லும் சில நாட்களுக்கு முன்னர் ரஷ்ய பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர்.

அந்த வீரர் போரில் துரதிஷ்டவசமாக மரணம் அடைந்தால் அவரின் சட்டபூர்வ மனைவியாக அந்தப் பெண்ணுக்கு அரசு முழு நிவாரண தொகையையும் வழங்கி விடும். ஏற்கனவே அந்த வீரருக்கு அண்ணன், தங்கை, குழந்தைகள், பெற்றோர்கள் அல்லது மனைவி இருந்தால் அவர்களுக்கு எந்த தொகையும் கிடைக்காது. இன்னும் சில பெண்கள் ஆண்களை கட்டாயப்படுத்தி பணத்திற்காக திருமணம் செய்து கொள்கின்றனர்.
செயின்ட் பீட்டர்ஸ் பார்க் என்ற பகுதியைச் சேர்ந்த 37 வயது மரியா என்பவரின் 59 வயது தந்தை ரஷ்ய போரில் உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை எடுத்து இராணுவ அதிகாரிகள் மரியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அப்போது வரை அவர் இறந்தது மட்டும்தான் அதிர்ச்சி செய்தியாக இருந்த நிலையில்.. ராணுவ வீரர்கள் மற்றொரு குண்டையும் தூக்கிப்போட்டனர்.
மரியாவின் தந்தை போருக்கு செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தன்னைவிட 22 வயது குறைவான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அப்படி ஒரு உறவு தனது தந்தைக்கு இருந்ததை அது வரையில் மரியா பார்த்ததே இல்லை. ஆனால் 22 வயது பெண் சட்டபூர்வ மனைவியாக இருந்ததால் அரசின் ரூ.60 லட்சம் இழப்பீடு முழுவதும் அந்தப் பெண்ணுக்கே வழங்கப்பட்டுள்ளது.
மேலும் போருக்கு செல்வதற்கு முன்னால் அவருடைய தந்தையின் வீடும் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதை மரியா துக்கம் தாளாமல் CNN ஊடகத்திற்கு தெரிவித்திருக்கிறார். இப்படி பல சம்பவங்கள் தொடர்ந்து ரஷ்யாவில் நடந்த வண்ணம் உள்ளன.
மிலிட்டரி ஹாஸ்பிடல் பணிபுரிந்து வந்த நர்ஸ் ஒருவர் தொடர்ந்து ஐந்து ராணுவ வீரர்களை திருமணம் செய்திருக்கிறார். போர்க்களத்தில் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த 5 ராணுவ வீரர்களை அடுத்தடுத்து பணத்திற்காகவே திருமணம் செய்ததால் அந்த செவிலியரும் தற்போது வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பெற்று உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.
இப்படி தொடர் மோசடிகள் நடப்பதால் அந்நாட்டு மக்கள் உண்மையான குடும்பங்களை கண்டுபிடித்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
