இந்தியா - ரஷ்யா மத்தியிலான வர்த்தகம் கடந்த 5 மாதத்தில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், நீண்ட கலாமாக இரு நாடுகள் மத்தியில் ராணுவ ஆயுதங்கள் கொள்முதல் தொடர்பு உள்ளது.
1947 முதல் இந்தியா - ரஷ்யா மத்தியிலான நட்பு மற்றும் வர்த்தகத் தொடர்புகள் இருக்கும் நிலையில் தற்போது 2018ல் இரு நாடுகள் மத்தியில் நடந்த முக்கியமான ஒப்பந்தம் குறித்த முக்கியமான அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.
இந்தியா-ரஷ்யா
இந்தியா - ரஷ்யா மத்தியிலான நட்புறவின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வைக் குறிக்கும் வகையில், இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், S-400 ட்ரையம்ஃப் ஏர் டிபென்ஸ் ஏவுகணைகளின் உற்பத்தி பணிகளைச் சிறப்பாகவும், வேகமாகவும் நடந்து வருகிறது. இதன் மூலம் குறித்த காலகட்டத்திற்குள்ள S-400 ஏவுகணைகள் டெலிவரி செய்யப்படும் என்று கூறினார்.
S-400 சிஸ்டம்
ஏர் டிபென்ஸ் மிசைல் பிரிவில் மிகவும் சிறந்த வகையான S-400 சிஸ்டம் குறித்த டெனிஸ் அலிபோவ்-வின் டெலிவரி அப்டேட், இந்திய பாதுகாப்பு துறைக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. 2018 அக்டோபரில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 5 S-400 ஏவுகணைகளை வாங்குவதற்காக 5.43 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டது.
கச்சா எண்ணெய்
இந்திய ரஷ்யா மத்தியில் நீண்ட கால நட்புறவு இருக்கும் நிலையில், உக்ரைன் போருக்கு பின்பு இந்தியா புடின் அரசுக்கு மிகவும் முக்கியமான வர்த்தகக் கூட்டணியாகத் திகழ்கிறது. ரஷ்யா உலக நாடுகளிடம் இழந்து வரும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை இந்தியாவை வைத்து தான் ஈடு செய்து வருகிறது.
ரஷ்யா 2வது இடம்
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்தியா தற்போது அதிகக் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் ரஷ்யா 2வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வளர்ச்சி கடந்த 5 மாதத்தில் நடந்தது என்றால் மிகையில்லை.
75வது சுதந்திர தினம்
2022 ஆம் ஆண்டில் இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இதே வருடம் இந்தியா-ரஷ்யா மத்தியிலான நட்புறவின் 75 வது ஆண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடப்படுகிறது கூடுதல் சிறப்பு.
1947 முதல்...
இந்தியாவில் 1950-1960 களில் சோவியத் நாடுகளின் உதவியுடன் பல தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் கட்டுமானம், 1958 இல் மும்பையில் ஐஐடி நிறுவப்பட்டது, 1971 ஆம் ஆண்டு அமைதி, நட்பு மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய ஒப்பந்தம் மூலம் 1984 இல் "சோயுஸ் டி-11" விண்கலம், கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானம், AK-203 துப்பாக்கிகள் உற்பத்தி, போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், பிரம்மோஸ் மற்றும் பிற ஏவுகணைத் திட்டங்கள் எனப் பலவற்றை ரஷ்யா உதவியுடன் இந்தியா செய்துள்ளது.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications