கர்நாடகாவின் முதலமைச்சராக (1999-2004) பதவி வகித்து, பெங்களூருவை இந்தியாவின் சிலிக்கான் வேலியாக மாற்றிய பெருமைக்குரியவர் எஸ்எம் கிருஷ்ணா என அழைக்கப்படும் சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா, தனது 92வது வயதில் இன்று காலை காலமானார்.
கடந்த சில மாதங்களாக பல்வேறு உடல்நலக்குறைவுகளுக்காக மருத்துவமனையில் இருந்த கிருஷ்ணா, செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30-2.45 மணியளவில் இறந்தார். கடந்த ஆண்டு, கிருஷ்ணாவுக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள காவேரி நதியின் கரையோரத்தில் அமைந்த சோமனஹள்ளி என்ற அழகிய கிராமத்தில் பிறந்தவர் எஸ்.எம். கிருஷ்ணா. தனது அடிப்படை கல்வியை மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் பயின்று, பின்னர் பெங்களூரில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார்.
தனது கல்வியை மேம்படுத்தும் எண்ணத்துடன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சதர்ன் மெத்தடிஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகச் சட்டப் பள்ளியில் உயர் கல்வி பயின்றார். அவரது பரந்த அறிவு மற்றும் கல்வித் திறன்களைக் கருதி, அவரது சொந்த ஊர் மக்கள் அவரை 'ஆக்ஸ்போர்டு கிருஷ்ணா’ என்று அன்புடன் அழைப்பர்.
எஸ்.எம். கிருஷ்ணா ஒரு திறமையான அரசியல்வாதி மட்டுமல்லாமல், ஒரு திறமையான நிர்வாகியும் கூட. அவர் அரசியலில் நுழைந்தாலும், தனது கல்வித் திறனை அரசியலில் பயன்படுத்தி, கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தினார். அவர் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவைப் போல, அரசியலை ஒரு வணிகமாகக் கருதி, கர்நாடகாவை ஒரு முன்னணி மாநிலமாக மாற்றும் பணியில் ஈடுபட்டார்.
எஸ்.எம். கிருஷ்ணா பெங்களூரை ஒரு உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். இதற்காக ஐடி சேவை துறை வேகமாக வளர்ச்சி அடைய புதிய தொழில்நுட்பங்களையும் மற்றும் புதிய முதலீட்டுகளை பெற சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை பெங்களூரில் அறிமுகப்படுத்தி, பெங்களூரை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகராக மாற்றினார்.
இவருடைய ஆட்சி காலத்தில் பெங்களூரில் அதிகப்படியான சப்வே, மேம்பாலங்கள், கேபிள் பிரிட்ஜ் போன்ற அதிநவீன கட்டமைப்புகளை கட்டியெழுப்பி, பெங்களூரை ஒரு நவீன நகரமாக மாற்றினார்.
எஸ்.எம். கிருஷணாவின் முயற்சியால், பெங்களூரில் இன்போசிஸ், விப்ரோ போன்ற பல பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாகின. மேலும், பயோகான் போன்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களும் பெங்களூரைத் தளமாகக் கொண்டு செயல்படத் தொடங்கின. அவர் கர்நாடகாவில் அரசு சேவைகளை இணையமயமாக்கி, அரசு சேவைகளை மக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்தார்.
எஸ்.எம். கிருஷணா கர்நாடக மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பல முக்கியமான பங்களிப்புகளைச் செய்தார். அவர் அரசு நிதித் துறையில் மறுசீரமைப்புச் செய்து, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தார். அவர் கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வராகவும், முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், மகாராஷ்டிர மாநிலத்தின் கவர்னராகவும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
பெங்களூர் வளர்ச்சியை எஸ்எம் கிருஷ்ணா-வுக்கு முன் பின் என பிரித்தால் சரியாக இதன் வளர்ச்சியை பார்க்க முடியும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications